குரோம்பேட்டையில் பெண்களிடம் செல்போன் பறித்த 10 மாணவர்கள் பிடிபட்டனர்
சென்னையை அடுத்த குரோம்பேட்டை நியூ காலனி பகுதியில் செல்போனில் பேசியபடி பெண் ஒருவர் நடந்து சென்றார். திடீரென ஒரு சிறுவன் அந்த பெண்ணிடம் இருந்து செல்போனை பறித்து விட்டு தப்பி ஓடிவிட்டான்.
தாம்பரம்,
சென்னையை அடுத்த குரோம்பேட்டை நியூ காலனி பகுதியில் செல்போனில் பேசியபடி பெண் ஒருவர் நடந்து சென்றார். திடீரென ஒரு சிறுவன் அந்த பெண்ணிடம் இருந்து செல்போனை பறித்து விட்டு தப்பி ஓடிவிட்டான். இது குறித்த புகாரின்பேரில் குரோம்பேட்டை போலீசார் அந்த பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அதில் அந்த பெண்ணிடம் சிறுவன் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட காட்சி பதிவாகி இருந்தது. வீடியோ காட்சியை வைத்து பார்த்ததில் செல்போன் பறிப்பில் ஈடுபட்டது அந்த பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவன் என்பது தெரிந்தது. அந்த மாணவனை பிடித்து போலீசார் விசாரித்தனர்.
அதில் அவன், தனது நண்பர்களுடன் சேர்ந்து இதுபோல் சாலையில் தனியாக செல்போனில் பேசியபடி நடந்து செல்லும் பெண்களிடம் செல்போன் பறிப்பில் ஈடுபட்டது தெரிந்தது. இதையடுத்து 17 வயதுக்கு உட்பட்ட பள்ளி மற்றும் ஐ.டி.ஐ. மாணவர்கள் 10 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். அவர்களிடம் இருந்து 13 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.

Next Story