தண்டையார்பேட்டையில் ரூ.3 லட்சம் புகையிலை பொருட்கள், போலி பீடிகள் பறிமுதல் 2 பேர் கைது


தண்டையார்பேட்டையில் ரூ.3 லட்சம் புகையிலை பொருட்கள், போலி பீடிகள் பறிமுதல் 2 பேர் கைது
x
தினத்தந்தி 25 Dec 2016 2:59 AM IST (Updated: 25 Dec 2016 2:59 AM IST)
t-max-icont-min-icon

தண்டையார்பேட்டையில் ரூ.3 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள், போலி பீடிகளை பறிமுதல் செய்த போலீசார், இது தொடர்பாக 2 பேரை கைது செய்தனர்.

ராயபுரம்,

தண்டையார்பேட்டையில் ரூ.3 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள், போலி பீடிகளை பறிமுதல் செய்த போலீசார், இது தொடர்பாக 2 பேரை கைது செய்தனர்.

புகையிலை பொருட்கள்

சென்னை தண்டையார்பேட்டை நேதாஜி நகர் 5-வது தெருவில் உள்ள ஒரு குடோனில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக வண்ணாரப்பேட்டை துணை கமிஷனர் ஜெயகுமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து அவரது உத்தரவின்பேரில் ஆர்.கே.நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரகுமார் தலைமையிலான போலீசார் அந்த குடோனில் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த குடோனில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் 13 மூட்டைகளில் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ.2 லட்சம் ஆகும். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், குடோன் உரிமையாளர் துரைப்பாண்டியன் (வயது 37) என்பவரை கைது செய்தனர்.

போலி பீடிகள்

இதேபோல் அதே பகுதியை சேர்ந்த ராமகளஞ்சியம் (50) என்பவரது வீட்டை போலீசார் திடீரென சோதனை செய்தனர். அப்போது அவரது வீட்டில் போலி பீடிகள் தயாரிப்பது தெரிய வந்தது. அவரிடம் இருந்து ரூ.1 லட்சம் மதிப்புள்ள போலி பீடிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், போலி பீடி தயாரித்ததாக ராமகளஞ்சியத்தை கைது செய்தனர். 

Next Story