மோட்டார் சைக்கிளில் மோதிய தனியார் பஸ் வயலில் இறங்கியது; மாணவர் உள்பட 3 பேர் காயம்
அரியலூரில் இருந்து திருச்சியை நோக்கி நேற்று மதியம் தனியார் பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. லால்குடியில் உள்ள சிதம்பரம் சாலையில் வந்த போது, திடீரென்று பஸ் எதிரே வந்த ஒரு மோட்டார் சைக்கிள் மீது மோதியது. தொடர்ந்து அந்த பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை
லால்குடி
அரியலூரில் இருந்து திருச்சியை நோக்கி நேற்று மதியம் தனியார் பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. லால்குடியில் உள்ள சிதம்பரம் சாலையில் வந்த போது, திடீரென்று பஸ் எதிரே வந்த ஒரு மோட்டார் சைக்கிள் மீது மோதியது. தொடர்ந்து அந்த பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையை விட்டு விலகி அருகில் உள்ள வயலில் இறங்கி நின்றது.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த கீழப்பழுர் பகுதியை சேர்ந்த செல்வம் என்பவரது மகன் கார்த்திக்குமார் (வயது 22) பலத்த காயம் அடைந்து திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் காயம் அடைந்த பஸ்சில் வந்த கோவண்டாகுறிச்சி முதலியார் தெருவை சேர்ந்த நடராஜ் மகன் அன்பரசு (17) மற்றும் அதே பகுதியை சேர்ந்த தங்கராஜ் மகன் ரமேஷ் (30) ஆகியோர் லால்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டனர்.
இதில் தனியார் வங்கி ஊழியரான ரமேஷ் லால்குடி அரசு மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டுள்ளார். இடது காலில் எலும்பு முறிவு ஏற்பட்ட பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் அன்பரசு திருச்சி அரசு மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்து குறித்து லால்குடி போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் உதயகுமார் விசாரணை நடத்தி புதூர்பாளையத்தை சேர்ந்த பஸ் டிரைவர் பரத் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார். தற்போது, விபத்துக்குள்ளான பஸ் கடந்த செப்டம்பர் மாதம் 9–ந் தேதி லால்குடியை அடுத்த கூழையாற்று பாலம் அருகில் சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது. அந்த விபத்திலும் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.