இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை தேவாலயங்களில் விசேஷ பிரார்த்தனைகள் நடக்கின்றன
உலகம் முழுவதிலும் உள்ள கிறிஸ்தவர்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ‘கிறிஸ்துமஸ் பண்டிகை’யை மகிழ்ச்சி பெருநாளாகக் கொண்டாடுகிறார்கள்.
சென்னை,

பைபிள்
ஏசு கிறிஸ்து 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு டிசம்பர் 25-ந்தேதி பெத்லகேம் என்னும் ஊரிலுள்ள ஒரு மாட்டுத்தொழுவில் பிறந்தார் என்று அவர்களது புனித நூலான “பைபிளில்” கூறப்பட்டுள்ளது. இந்த நாளை ‘கிறிஸ்துமஸ் பண்டிகை’ என்று உலகம் முழுவதிலும் உள்ள கிறிஸ்தவர்கள் மகிழ்ச்சியோடு கொண்டாடுகிறார்கள்.
கிறிஸ்தவர்கள் வீடுகளில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் சிலநாட்களுக்கு முன்பே தொடங்கிவிட்டது. வீட்டு வாசல்களில் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட நட்சத்திரங்களை தொங்கவிட்டிருக்கிறார்கள். வீடுகளுக்குள் கிறிஸ்துமஸ் மரம் வைத்து அதை அலங்கரித்து அதில் குழந்தைகளுக்காக சிறு, சிறு பரிசுபொருட்களை தொங்கவிட்டு உள்ளனர்.
கிறிஸ்துமஸ் தாத்தா
அந்ததந்த பகுதிகளில் தேவாலயங்களில் உள்ள பாடகர்கள் குழுவினர் டிசம்பர் மாதம் முழுவதுமே இரவில் கிறிஸ்தவர்கள் வீடுகளுக்குச் சென்று, பாடல்களைப்பாடி பிரார்த்தனை செய்வார்கள். அவர்களுடன் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்த ஒருவர் ஆடிப்பாடி குழந்தைகளை மகிழ்வித்து, இனிப்புகளும், பரிசுகளும் வழங்குவார்.
சென்னையில், கடந்த ஆண்டு மழைவெள்ளம் ஏற்பட்டதாலும், இந்த ஆண்டு ஜெயலலிதா மறைவு, வார்தா புயல், கருணாநிதி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற அனுமதிக்கப்பட்டு இருந்தது ஆகியவை காரணமாகவும் கிறிஸ்துமஸ் பாடகர்கள் குழு வீடுகளுக்கு வருவது ரத்து செய்யப்பட்டிருந்தது.
விசேஷ பிரார்த்தனைகள்
இந்த நாளில் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தேவாலயங்களில் விசேஷ பிரார்த்தனைகள் நள்ளிரவு முதல் அதிகாலை 4 மணி, 7 மணி, 8.30 மணி, மாலையில் என்று ஒவ்வொரு கோவிலிலும் பலமுறைகள் பிரார்த்தனைகள் நடத்தப்படுகின்றன.
சென்னை அண்ணா மேம்பாலம் அருகிலுள்ள கதீட்ரல் தேவாலயத்தில் இம்மானுவேல் தேவகடாட்சம் பாதிரியார், அடையார் இயேசு அன்பர் ஆலயத்தில் எர்னஸ்ட் செல்வதுரை பாதிரியார், நெசப்பாக்கம் புனித அன்னாள் கத்தோலிக்க தேவாலயத்தில் பங்குகுரு லாரன்ஸ் அடிகளார், கிழக்கு தாம்பரம் செயிண்ட் மாத்யூஸ் சி.எஸ்.ஐ. கோவிலில் எஸ்.சாமுவேல் பாதிரியார், வில்லிவாக்கம் திரு இருதய ஆண்டவர் கோவிலில் ஜான் பிரிட்டோ அடிகளார், நுங்கம்பாக்கம் அற்புத சீயோன் சி.எஸ்.ஐ. கோவிலில் சிகாமணி பாதிரியார் ஆகியோர் விசேஷ பிரார்த்தனை நடத்துகிறார்கள்.
இதுபோல, சென்னையிலுள்ள அனைத்து தேவாலயங்களிலும் பங்குகுருக்களும், பாதிரியார்களும் விசேஷ பிரார்த்தனை நடத்துகிறார்கள். பிரார்த்தனை முடிந்து வெளியேவரும் பக்தர்களுக்கு பாதிரியார்களும், பங்குகுருக்களும் கேக் வழங்கி கிறிஸ்துமஸ் வாழ்த்து கூறுவார்கள்.

Next Story