சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரம்: சென்னையில் ஆர்ப்பாட்டம்

சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரம்: சென்னையில் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 25 Dec 2016 3:13 AM IST (Updated: 25 Dec 2016 3:13 AM IST)
t-max-icont-min-icon

சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் எல்லா வயது பெண்களும் சென்று தரிசிக்கலாம் என்ற கேரள அரசின் தீர்மானத்தை கண்டிக்கும் வகையில் சென்னையில், சபரிமலை தர்மசாஸ்தா ஆச்சார சம்ரக்‌ஷன சமிதி சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னை,

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அகில உலக விஸ்வ இந்து பரிஷத் முன்னாள் செயல் தலைவர் வேதாந்தம் தலைமை தாங்கினார். மாநில தலைவர் நாராயணசாமி, தமிழ்நாடு மலையாளி சமாஜ மாநகர தலைவர் பரமேஸ்வரன், சமூக சேவகி ஸ்ரீசைலி, சென்னை மாநகர தலைவர் வீனஸ் ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில், வேதாந்தம் பேசுகையில், ‘நாடு சுதந்திரம் அடைந்த பிறகுதான் இந்துக்களுக்கு எதிரான பிரச்சினை தொடங்கி அநீதி இழைக்கப்படுகிறது. கேரளாவில் இந்துக்களின் எண்ணிக்கை குறையும் போது அவர்களின் உரிமைகள் பறிக்கப்படும். இந்துக்களின் பாரம்பரியத்தை அழிப்பதற்காக அரசியல் கட்சிகள் முன்வருகின்றன. எனவே இந்துக்கள் பிரச்சினைக்கு நாம் எல்லாரும் ஒன்று சேர்வோம்’ என்று தெரிவித்தார். 

Next Story