பாகூர் அருகே குடிசை வீடுகளில் தீ விபத்து ரூ.2 லட்சம் பொருட்கள் சேதம்


பாகூர் அருகே குடிசை வீடுகளில் தீ விபத்து ரூ.2 லட்சம் பொருட்கள் சேதம்
x
தினத்தந்தி 25 Dec 2016 3:16 AM IST (Updated: 25 Dec 2016 3:16 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரி மாநிலம் பாகூரை அருகே அரங்கனூர் காலனியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன், கூலி தொழிலாளி. இவருடைய தம்பி பாபு மற்றும் தாய் கிருஷ்ணவேணி ஆகியோர் அரங்கனூர் காலனியில் குடிசை வீட்டில் வசித்து வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று மாலை ராதாகிருஷ்ணனின் வீட்டில் தி

பாகூர்,

புதுச்சேரி மாநிலம் பாகூரை அருகே அரங்கனூர் காலனியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன், கூலி தொழிலாளி. இவருடைய தம்பி பாபு மற்றும் தாய் கிருஷ்ணவேணி ஆகியோர் அரங்கனூர் காலனியில் குடிசை வீட்டில் வசித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று மாலை ராதாகிருஷ்ணனின் வீட்டில் திடீரென தீப்பிடித்துக் கொண்டது. தீப்பிடித்ததை அறிந்ததும் வீட்டில் இருந்தவர்கள் அலறியடித்து வெளியே ஓடி வந்தனர். சிறிது நேரத்தில் அந்த தீ ‘‘மள மள’’வென வீடு முழுவதும் பரவியது. இதில் வீட்டில் இருந்த சமையல் வாயு சிலிண்டர் வெடித்து சிதறியது. அதில் இருந்து பரவிய தீப்பிழம்புகள் அருகில் பிரகாஷ் என்பவரின் வீட்டின் கூரையில் விழுந்து அந்த வீட்டின் கூரையிலும் தீ பிடித்துக்கொண்டது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் பாகூர் தீயணைப்பு நிலையத்தில் இருந்து தீயணைக்கும் படை வீரர்கள் விரைந்து வந்து சுமார் 30 நிமிடம் நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தி அணைத்தனர்.

இந்த தீ விபத்தில் 2 குடிசை வீடுகள் அவற்றில் இருந்த பொருட்கள் முழுமையாக எரிந்து சாம்பல் ஆயின. சேத மதிப்பு ரூ.2 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த தீவிபத்து குறித்து பாகூர் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.


Next Story