கிறிஸ்துமஸ் விழா: காப்பக குழந்தைகளுடன் கிரண்பெடி கொண்டாட்டம்
புதுச்சேரி கவர்னர் மாளிகையில் கவர்னர் கிரண்பெடி, புதுவையை சேர்ந்த சிறுவர் காப்பகத்தை சேர்ந்த குழந்தைகளுடன் கிறிஸ்துமஸ் பண்டிகை நேற்று மாலை கொண்டாடினார். அப்போது அவர், குழந்தைகளுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்து, பரிசுகள் வழங்கினார். அதையடுத்து குழந்தை
புதுச்சேரி,
புதுச்சேரி கவர்னர் மாளிகையில் கவர்னர் கிரண்பெடி, புதுவையை சேர்ந்த சிறுவர் காப்பகத்தை சேர்ந்த குழந்தைகளுடன் கிறிஸ்துமஸ் பண்டிகை நேற்று மாலை கொண்டாடினார். அப்போது அவர், குழந்தைகளுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்து, பரிசுகள் வழங்கினார்.
அதையடுத்து குழந்தை இயேசு கிறிஸ்து பிறப்பை குறிக்கும் வகையில் நாடகமும் நடந்தது. அதைத்தொடர்ந்து பள்ளி மாணவ–மாணவிகளின் பரத நாட்டியம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
Next Story