புத்தாண்டு கொண்டாட்டத்தில் அனுமதி பெற்ற நிகழ்ச்சிகளை மட்டுமே நடத்த வேண்டும் ஓட்டல் உரிமையாளர்களுக்கு, சீனியர் போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை


புத்தாண்டு கொண்டாட்டத்தில் அனுமதி பெற்ற நிகழ்ச்சிகளை மட்டுமே நடத்த வேண்டும் ஓட்டல் உரிமையாளர்களுக்கு, சீனியர் போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை
x
தினத்தந்தி 25 Dec 2016 3:30 AM IST (Updated: 25 Dec 2016 3:20 AM IST)
t-max-icont-min-icon

புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது அனுமதி பெற்ற நிகழ்ச்சிகளை மட்டுமே நடத்த வேண்டும் என்று ஓட்டல் உரிமையாளர்களுக்கு, சீனியர் போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்துள்ளார். கூட்டம் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு விழாக்கால பாதுகாப்ப

புதுச்சேரி

புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது அனுமதி பெற்ற நிகழ்ச்சிகளை மட்டுமே நடத்த வேண்டும் என்று ஓட்டல் உரிமையாளர்களுக்கு, சீனியர் போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கூட்டம்

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு விழாக்கால பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் போக்குவரத்து சீரமைப்புகள் குறித்து போலீஸ் அதிகாரிகள் மற்றும் ஓட்டல் உரிமையாளர்கள் கலந்தாய்வு கூட்டம் நேற்று காலை காவல்துறை தலைமை அலுவலகத்தில் நடந்தது.

கூட்டத்திற்கு சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராஜீவ்ரஞ்சன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

அனுமதி பெற்ற நிகழ்ச்சிகள்

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக புதுச்சேரிக்கு அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருவார்கள். அதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க பல்வேறு பகுதிகளை வாகனங்கள் நிறுத்த தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்க உள்ளோம். அந்த பகுதிகளில் வாகனங்கள் எதையும் நிறுத்தக்கூடாது. நிறுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும்.

ஓட்டல்களில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது எந்தெந்த நிகழ்ச்சிகளுக்கு அனுமதி பெற்றப்பட்டதோ அதை மட்டுமே நடத்த வேண்டும். அனுமதி பெறாத நிகழ்ச்சிகளை நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதுபோல் ஆன்லைன் உள்ளிட்ட எந்த வகையிலும் விபசார தொழிலை அனுமதிக்க முடியாது. ஓட்டல்களில் விபசாரம் நடத்துவது தெரிந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு ராஜீவ் ரஞ்சன் கூறினார்.

கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டுகள் வெங்கடசாமி, ரச்சனா சிங், பாலகிருஷ்ணன், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்–இன்ஸ்பெக்டர்கள் மற்றும் தனியார் ஓட்டல் உரிமையாளர்கள், நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story