எம்.ஜி.ஆர். நினைவு தினம்: சிலைக்கு, நாராயணசாமி மரியாதை அ.தி.மு.க.வினரும் மாலை அணிவித்து வணங்கினர்


எம்.ஜி.ஆர். நினைவு தினம்: சிலைக்கு, நாராயணசாமி மரியாதை அ.தி.மு.க.வினரும் மாலை அணிவித்து வணங்கினர்
x
தினத்தந்தி 25 Dec 2016 3:20 AM IST (Updated: 25 Dec 2016 3:20 AM IST)
t-max-icont-min-icon

எம்.ஜி.ஆர். நினைவு தினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு முதல்–அமைச்சர் நாராயணசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அ.தி.மு.க.வினரும் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து வணங்கினர். எம்.ஜி.ஆர். நினைவு தினம் புதுச்சேரி அரசு செய்தி மற்றும் விளம்பரத்துறை

புதுச்சேரி,

எம்.ஜி.ஆர். நினைவு தினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு முதல்–அமைச்சர் நாராயணசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அ.தி.மு.க.வினரும் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து வணங்கினர்.

எம்.ஜி.ஆர். நினைவு தினம்

புதுச்சேரி அரசு செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பில் தமிழக முன்னாள் முதல்–அமைச்சர் எம்.ஜி.ஆர். நினைவு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு மறைமலை அடிகள் சாலையில் புதிய பஸ்நிலையம் எதிரே உள்ள அவரது சிலைக்கு முதல்–அமைச்சர் நாராயணசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கந்தசாமி, கமலக்கண்ணன், முன்னாள் எம்.எல்.ஏ. ஜான்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அ.தி.மு.க.

அ.தி.மு.க. சார்பில் மறைமலை அடிகள் சாலையில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாநில செயலாளர் புருஷோத்தமன் தலைமையில் அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் முன்னாள் எம்.பி. ராமதாஸ், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பரசுராமன், அன்பழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

உப்பளத்தில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் அன்பழகன், பாஸ்கர் ஆகியோர் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்தனர். அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த எம்.ஜி.ஆர். உருவ படத்திற்கும் மரியாதை செலுத்தினர். பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக வந்து மறைமலை அடிகள் சாலையில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

நிகழ்ச்சியில் மாநில துணை செயலாளர்கள் கணேசன், பன்னீர் செல்வி, பொருளாளர் சுத்துக்கேணி பாஸ்கர், நகர செயலாளர்கள் ரவீந்திரன், அன்பானந்தம் மற்றும் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

முத்தியால்பேட்டை

முத்தியால்பேட்டை தொகுதி அ.தி.மு.க. சார்பில் மணிக்கூண்டு அருகே நடந்த நிகழ்ச்சியில் வையாபுரி மணிகண்டன் எம்.எல்.ஏ. தலைமையில் எம்.ஜி.ஆர். உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் ஊர்வலமாக சென்று மறைமலை அடிகள் சாலையில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

புதிய நீதிக்கட்சி சார்பில் எம்.ஜி.ஆர். சிலைக்கு கட்சியின் மாநில தலைவர் பொன்னுரங்கம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் காமராஜ், நடராஜன், தேவநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அரியாங்குப்பம்

அரியாங்குப்பம் தொகுதி அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். உருவ படத்திற்கு கட்சியின் தொகுதி செயலாளர் ஆனந்தன் தலைமையில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

காக்காயந்தோப்பில் எம்.ஜி.ஆர். மன்ற மாநில துணைச் செயலாளர் மாசிலா குப்புசாமி தலைமையில் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் கட்சியின் அவைத்தலைவர் நடராஜன், குமரன், குப்புசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

உருளையன்பேட்டை

புதுவை மாநில மனிதநேய மக்கள் சேவை இயக்கம் மற்றும் உருளையன்பேட்டை தொகுதி என்.ஆர். காங்கிரஸ் கட்சி சார்பில் மனிதநேய மக்கள் சேவை இயக்க அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த எம்.ஜி.ஆர். உருவ படத்திற்கு முன்னாள் எம்.எல்.ஏ. நேரு தலைமையில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக சென்று மறைமலை அடிகள் சாலையில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்தனர்.


Next Story