பெரியமனோபுரம் கிராமத்தில் மின்சாரம், குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் மறியல்


பெரியமனோபுரம் கிராமத்தில் மின்சாரம், குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் மறியல்
x
தினத்தந்தி 25 Dec 2016 3:23 AM IST (Updated: 25 Dec 2016 3:23 AM IST)
t-max-icont-min-icon

பொன்னேரியை அடுத்த கம்மவார்பாளையம் ஊராட்சியில் அடங்கியது பெரியமனோபுரம் கிராமம். இங்கு கடந்த 12-ந்தேதி வார்தா புயல் கரையை கடந்தபோது மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள்

பொன்னேரி,

பொன்னேரியை அடுத்த கம்மவார்பாளையம் ஊராட்சியில் அடங்கியது பெரியமனோபுரம் கிராமம். இங்கு கடந்த 12-ந்தேதி வார்தா புயல் கரையை கடந்தபோது மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். நேற்று வரை மின்சாரம் வழங்கப்பட வில்லை. இந்த நிலையில் நேற்று அந்த பகுதி மக்கள் தங்களுக்கு மின்சாரம், குடிநீர் வழங்க வேண்டும் என்று கூறி பொன்னேரி- தத்தைமஞ்சி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த காட்டூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதையடுத்து மறியல் கைவிடப்பட்டது. 

Next Story