நாட்டிய விழாவில் ஜெயலலிதா படம் வைக்கவில்லை என தகராறில் ஈடுபட்டவரால் பரபரப்பு
சென்னையை அடுத்துள்ள மாமல்லபுரத்தில் ஆண்டுதோறும் சுற்றுலாத்துறை சார்பில் வெளிநாடு மற்றும் உள்நாட்டு பயணிகளை கவரும் வகையில் ஒரு மாதம் நாட்டிய விழா நடைபெறுவது வழக்கம்.
மாமல்லபுரம்,
சென்னையை அடுத்துள்ள மாமல்லபுரத்தில் ஆண்டுதோறும் சுற்றுலாத்துறை சார்பில் வெளிநாடு மற்றும் உள்நாட்டு பயணிகளை கவரும் வகையில் ஒரு மாதம் நாட்டிய விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு விழா நேற்று முன்தினம் தொடங்கியது. திறந்த வெளி விழா மேடையில் எப்போதும் முதல்-அமைச்சர் படம் இடம் பெறுவது வழக்கம். குறிப்பாக தற்போது அரசு விழா மேடைகளில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா படம் வைக்கப்பட்டு வருகிறது. இந்த நாட்டிய விழாவில் அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் யாருக்கும் அழைப்பு இல்லாததால் அவர்கள் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் நாட்டிய விழா மேடையில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா படம் ஏன் வைக்கவில்லை என்று மாமல்லபுரம் சுற்றுலா வழிகாட்டி வரதராஜன் என்பவர் சுற்றுலாத்துறை அதிகாரிகளிடம் தகராறில் ஈடுபட்டார். அப்போது அதிகாரிகள் அவரிடம் மழுப்பலான பதில் கூறியதால் அருகில் இருந்த பார்வையாளர்கள் சுற்றுலா வழிகாட்டியின் பேச்சுக்கு ஆதரவு தெரிவித்து பேசினர்.
இதையடுத்து அதிகாரிகள் உடனடியாக விழாவின் வலது புறத்தில் உள்ள நாட்டிய விழாவின் பேனரில் ஜெயலலிதாவின் படத்தை ஒரு ஓரத்தில் வைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story