பெருங்களத்தூரில் குப்பைக் கிடங்கு தீப்பிடித்து எரிந்தது


பெருங்களத்தூரில் குப்பைக் கிடங்கு தீப்பிடித்து எரிந்தது
x
தினத்தந்தி 25 Dec 2016 3:34 AM IST (Updated: 25 Dec 2016 3:34 AM IST)
t-max-icont-min-icon

தாம்பரம் அருகே உள்ள பெருங்களத்தூர் பேரூராட்சி மற்றும் முடிச்சூர் ஊராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள் பெருங்களத்தூர் குண்டுமேடு பகுதியில் உள்ள குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு வருகிறது.

தாம்பரம்,

தாம்பரம் அருகே உள்ள பெருங்களத்தூர் பேரூராட்சி மற்றும் முடிச்சூர் ஊராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள் பெருங்களத்தூர் குண்டுமேடு பகுதியில் உள்ள குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு வருகிறது. வார்தா புயலின்போது சாய்ந்து விழுந்த மரங்களை அப்புறப்படுத்திய பின்னர் கிடந்த மரக்கழிவுகளும் இந்த குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் நேற்று மாலை மரக்கழிவுகளில் திடீரென தீப்பிடித்து எரியத்தொடங்கியது. அப்போது அருகில் கிடந்த குப்பைகளிலும் பரவி தீ எரிந்தது. இரவு முழுவதும் தீ எரிந்ததால் அந்தப்பகுதி முழுவதும் புகை மூட்டமாக காணப்பட்டது. 

Next Story