எத்தனை அழகு கொட்டிக்கிடக்குது
‘படித்தது எதுவாக இருந்தாலும், தங்களுக்கு பிடித்த கலையில் இறங்கி சாதிக்கவேண்டும்’ என்பதில் இன்றைய இளம்பெண்கள் குறியாக இருக்கிறார்கள். அதிலும் தாங்கள் ஈடுபடும் கலை மூலம் வருமானம் மட்டுமல்ல, மனமும் நிறைய வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறார்கள்.

அப்படிப்பட்ட சிந்தனைகொண்ட கலைப் படைப்பாளிகளில் ஒருவர், ரேவதி. வயது 27. இவர் படித்தது– எம்.எஸ்சி, தகவல் தொழில்நுட்பக் கல்வி. இப்போது செய்து கொண்டிருப்பது– கலைப் பொருட்கள் தயாரிப்பு. வசிப்பது– கோவையில். இவரது கணவர் ஹரீஸ் ராமன்.
ரேவதி படித்த படிப்பிற்கு வேலை கிடைத்தும், செல்ல விரும்பாமல் வீட்டிலேயே சுயதொழிலாக வண்ணக்கலவைகளில் பொம்மைகளையும், பேஷன் ஜூவல்லரிகளையும் வடிவமைத்து, ஓசையில்லாத ஓவியமாக ஒளிர்கிறார். இவரது நவீன ஆபரணங்கள் இணையதளத்தில் பரவி, பலரையும் கவர்ந்து வருகிறது.
ரேவதியின் வீடு முழுவதும் விதவிதமான பொம்மைகள், கை வளையல்கள், கழுத்து ஆபரணங்கள், வீட்டு அலங்கார பொருட்கள் அணிவகுத்து ஜொலிக்கின்றன. அனைத்தும் அவர் உருவாக்கியவை.
அவரது கலைநுட்பமிக்க வேலைப்பாடுகளை பார்த்து ரசித்த படியே பேசத் தொடங்கினோம்:
‘‘பள்ளியில் படிக்கும்போதே நான் ஓவியங்களை தீட்டினேன். அந்த ஆர்வம்தான் என்னுள் புதுப்புது தேடல்களை ஏற்படுத்தியது. வீட்டில் இருக்கும்போது இயற்கை காட்சிகளை வரைந்து வண்ணம் தீட்டுவது எனது பொழுது போக்காக இருந்தது. கல்லூரியில் படிக்கும்போது பேஷன் ஜூவல்லரி தயாரிப்பது, நவீன முறையில் பொம்மைகள் உருவாக்குவது போன்றவைகளில் என் கவனம் செல்லத் தொடங்கியது. அதற்கான வகுப்புகளில் சேர்ந்து கற்றுக்கொண்டேன்.
பெண்கள் டெரகோட்டா நகைகள் மீது பெரும்மதிப்பு வைத்திருக்கிறார்கள். டெரகோட்டா நகைகளை பொறுத்தவரை, அதற்குரிய களிமண்ணை வாங்கி, டிசைன்களை உருவாக்கி வெயிலில் காயவைத்து, அதில் தேவையான வண்ணங்களை தீட்டி, அவற்றை நகையாக முழுமைப்படுத்தவேண்டும். இது, நவீன கால ஆபரண கலையின் புதிய வடிவமாகும். டெரகோட்டா நகைகளை அணிவதற்கு பெண்கள் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். அணியும் ஆடைக்கு ஏற்றவாறு இந்த நகைகளை அணிந்து கொள்ள முடியும் என்பதால், மேல்தட்டு மட்டுமின்றி, நடுத்தர மக்களிடமும் இந்த நகைகளுக்கு அதிக மோகம் உள்ளது.
பலவண்ண மெஷின் எம்ப்ராய்டரி நூல்களைவைத்து நான் ஆடைக்கு மேட்சாக வளையல், தோடு, நெக்லஸ் போன்றவற்றை வடிவமைப்பேன். கண்ணாடி வளையல்கள், ரப்பர் வளையல்களில் தான் இந்த புதுமையை உருவாக்குகிறேன். இது சில்க் திரட் ஜூவல்லரி ஆகும். அழகான பொம்மைகளையும் செய்கிறேன். பொம்மைகள் செய்வது பழமையான கலைதான் என்றாலும், அவற்றுக்கு நான் செய்யும் ஆடை, நகைகள், முடி அலங்காரம் மூலம் அவைகளை புதுமையாக்கிவிடுகிறேன். மணவிழா காணும் புதுமணத்தம்பதிகள் போன்ற பொம்மைகளையும் உருவாக்குகிறேன். அவைகளை திருமணத்தின்போது சீர்வரிசைதட்டுகளில் வைக் கிறார்கள். அவை மணவிழாவிற்கு வருகிறவர்களை வெகுவாக கவர்கிறது. வீட்டில் நாம் பயன்படுத்தும் தட்டுகள், ஜாடிகள், கண்ணாடிகள் போன்ற அனைத்திலும் கலைத்திறனை காட்டி காண்போரை கவர்ந்திட முடியும்’’ என்கிறார், ரேவதி.
இவர் தனது கலைப்படைப்புகள், மனஅழுத்தத்தை போக்கும் மருந்துபோல் செயல்படுவதாகவும் சொல்கிறார்.
‘‘நமது மனம் புதுமைக்கு ஏங்குகிறது. புதுமை மூலம் மனிதர்களுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும். புதுமையைத்தான் பேஷன் என்கிறோம். பேஷன் என்பது மாறிவரும் உலகின் நவீன வாழ் வியல் முறையாகும். காண்பது, காட்சிப்படுத்துவது இரண்டும் பேஷனின் அடிப்படை நிலைகள். ஒரு பொருளை காண்பதற்கு கண்கள் போதும். ஆனால் அதனை மற்றவர்களை கவரும் விதத்தில் காட்சிப்படுத்துவதற்கு சிறந்த சிந்தனையும், செயலாக்கமும், கடின உழைப்பும் தேவை.
நாம் ஒரு ஓவியத்தை தீட்டும்போதும், கலைப்படைப்புகளை உருவாக்கும்போதும் இன்னொரு வண்ண உலகத்திற்குள் சென்றுவிடுவோம். கலை வேலைப்பாடுகள் நம்மை புதிது புதிதாக கனவு காண வைக்கிறது. அந்த கனவுகளை நாம் கலைப்படைப்புகளாக உருவாக்கும்போது மனதுக்கு அமைதியும், சாந்தமும் கிடைக்கும். எனக்கு அவை கிடைத்துக்கொண்டிருக்கின்றன’’ என்கிறார்.
பெற்றோர் வழிகாட்டுதல் மூலம் இந்த கலை உலகுக்குள் அடியெடுத்து வைத்த ரேவதி, திருமணத்திற்கு பின்பு கணவரின் ஊக்குவிப்போடு வேகமாக இந்த துறையில் முன்னேறியிருக்கிறார்.
‘‘இளம் பெண்ணாக இருந்தபோது ஒரு பெண்ணுக்குள் இருந்த துணிச்சல், மகிழ்ச்சி, கலைத்திறன் ஈடுபாடு போன்றவை எல்லாம் திருமணத்துக்கு பிறகும் அவளிடம் இருக்குமா? என்ற கேள்வி இப்போது பலராலும் கேட்கப்படுகிறது.
இந்த கேள்விக்கு விடையாக இருப்பவர்கள் அவர்களுக்கு கிடைக்கும் கணவர்கள். கணவரது அரவணைப்பையும், அன்பையும் பொறுத்துதான் பெண்களின் அடுத்தகட்ட வளர்ச்சி அமையும். எனது கணவர் எனக்கு தேவையான ஊக்குவிப்பை தந்துகொண்டிருக்கிறார்.
என்னை போன்று தகவல் தொழில்நுட்பம் படித்த பெண்கள், பல்வேறு நிறுவனங்களில் வேலை செய்துகொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்களில் ஒரு பகுதியினருக்கு அந்த வேலையால் மனஅழுத்தம் ஏற்படுகிறது. அந்த மன அழுத்தம் அவர்களின் ஹார்மோன்களில் பாதிப்பை ஏற்படுத்திவிடுகிறது. ஹார்மோன்கள் சீராக இருந்தால்தான், பெண்களின் மனநிலை இயல்பாகவும், அமைதியாகவும் இருக்கும். அப்போதுதான் பெண்களுக்கே உரித்தான மாதவிடாய், தாய்மை போன்றவைகள் எல்லாம் சரியாக அமையும். பெண்கள் மனஅழுத்தம் எதுவும் இல்லாமல் மகிழ்ச்சியான மனநிலையோடு, ஆரோக்கியமான உடல்நிலையோடு வாழவேண்டும் என்றால் அவர்கள் கைத்திறன் கலைப்பயிற்சிகளை பெற்று, அதில் ஈடுபடவேண்டும்.
நான் இந்த கலைப் படைப்புகள் மூலம் மிகுந்த மனமகிழ்ச்சியை அடைகிறேன். ஒரு நாளைக்கு 2 மணிநேரம்தான் இந்த படைப்பு பணிகளில் ஈடுபடுகிறேன். இதன் மூலம் முழு நாளும் மகிழ்ச்சியை பெறுகிறேன். மாதம் ரூ.10 ஆயிரம் வரை சம்பாதிக்கவும் செய்கிறேன். கூடுதலாக நேரத்தை ஒதுக்கி இதை தொழில்ரீதியாக செய்தால் நிறைய பெண்களுக்கு என்னால் வேலை கொடுக்க முடியும். தொழிற்கூடத்தை உருவாக்கி, ஏற்றுமதி செய்து ஏராளமாக பணம் சம்பாதிக்கவும் முடியும். ஆனால் போதும் என்ற மனதுடன் குறைந்த அளவே படைப்புகளை உருவாக்குகிறேன். போதும் என்ற நிறைவில்தான் வாழ்க்கையை அனுபவிக்கக்கூடிய நிம்மதியும், சந்தோஷமும் இருக்கிறது. ‘பறக்கிறதுக்கு மட்டும் அல்ல சிறகு, அமர்ந்து இளைப்பாறவும்தான் என்பதை எந்த பறவை தெரிந்து கொள்கிறதோ அந்த பறவைக்கு வானமும், பூமியும் வசப்படும்’ என்று தத்துவவாதிகள் சொன்னது உண்மைதான். நாம் பிறந்தது பணம் சம்பாதிக்க அல்ல.. மகிழ்ச்சியாக வாழத்தான்..!’’ என்று ரேவதி தத்துவார்த்தமாக சொல்கிறார்.
இவர் தான் கற்ற கலையை இதர பெண்களுக்கு கற்றுக்கொடுக்கவும் செய்கிறார்.
‘‘எனக்கு திருமணமாகி ஓராண்டுதான் ஆகிறது. கணவர் என்னையும், என் திறமைகளையும் நேசிக்கிறார். எனது தாயார் புஷ்பாவும் எனது கைவினைதொழிலுக்கு கை கொடுக் கிறார். நான் 60 விதமான படைப்புகளை உருவாக்குகிறேன். ஆர்வமுள்ளவர்களுக்கு கற்றுக்கொடுக்கவும் செய்கிறேன். பெண்கள் கலைப்படைப்புகளை உருவாக்குவதன் மூலம் பணத்தையும், மகிழ்ச்சியையும் பெறலாம்’’ என்கிறார், ரேவதி.
இவரது தந்தை பெயர் ஜெகநாதன் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி. தாயார் புஷ்பா. தம்பி பாலாஜி. இவர்களது பூர்வீகம் மதுரை.

Next Story