உஷாரய்யா உஷாரு..
அவர்கள் புதுமணத் தம்பதிகள். தமிழகத்தின் தென்மாவட்டத்தை சேர்ந்தவர்கள். திருமணமாகி சில மாதங்களே ஆகியிருக்கின்றன. கணவர் சென்னையின் புறநகர் பகுதியில் சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார். எம்.பி.ஏ. படித்திருக்கும் மனைவிக்கு வேலை தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

கணவர் அலுவலகத்திற்கு செல்வதற்கு வசதியாக, அந்த பகுதியிலே அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வாடகைக்கு வீடு பிடித்து வசித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் இளந்தம்பதியாக இருப்பதாலும், அந்த பகுதிக்கு புதிதாக குடிவந்தவர்கள் என்பதாலும் அக்கம் பக்கத்தினரிடம் நட்புரீதியாக பழக்கத்தை வலுப்படுத்திக்கொள்ளவில்லை.
‘வார்தா’ புயல் அடித்த அன்று காலையிலே வழக்கம்போல் கணவர் வேலைக்கு கிளம்பிச் சென்று விட்டார். ‘அறிவிப்போடு நின்று விடும். ஆபத்து ஒன்றும் ஏற்படாது’ என்று நினைத்துக் கொண்டிருந்த அவர், அவ்வப்போது ‘அப்டேட்’ செய்யப்பட்ட புயல் செய்திகளைப் பார்த்து கலவரமடைந்து விட்டார். அப்போது புயலின் தாக்கமும் தொடங்கி விட்டது.
‘அடுத்து மின்சாரம் துண்டிக்கப்பட்டு விடும். இதே வேகத்தில் புயலடித்தால் ஏராளமான மரங்கள் சாய்ந்து, போக்குவரத்து தடைபட்டுவிடும். தகவல்தொடர்பும் முற்றிலுமாக முடங்கும்’ என்ற அறிவிப்பு வந்ததும், அவசர அவசரமாக மனைவிக்கு போன் போட்டு, ‘தயாராக இரு. நமது வீடு புறநகர் பகுதியில் இருப்பதால், புயலால் பெரும் பாதிப்பு ஏற்பட இருக்கிறது. நாலைந்து நாட்களுக்கு மின்சாரம், தண்ணீர், செல்போன் தொடர்பு எதுவும் இருக்காது. அதனால் நகரத்தின் மையப்பகுதியில் இருக்கும் உறவினர் வீட்டிற்கு சென்று விடுவோம்’ என்றார்.
கணவரின் பதற்றக்குரல் அவளை அச்சமடைய வைத்தது. கையில் கிடைத்த துணிமணிகளை எடுத்து சூட்கேசில் அடைத்துக் கொண்டு, சாலையையே பார்த்துக் கொண்டிருந்தாள். கணவர் காரில் வந்து, கீழே நின்றுகொண்டு, ‘சீக்கிரம் காருக்கு வா..’ என்றார். அவளும் சூட்கேசுடன் ஓடிவந்து ஏறிக் கொண்டாள்.
புயல் வேகம் அதிகரித்து, ஆங்காங்கே மரங்கள் விழுந்து கொண்டிருந்த போதும், மழை மிரட்டிய போதும் அவர் காரை ஓட்டிக் கொண்டு உறவினர் வீட்டை வந்தடைந்தார். அதற்குள் மின்சாரம் துண்டிக்கப்பட்டு விட்டது. நிம்மதி பெருமூச்சு விட்டபடி உறவினர் வீட்டில் தங்கினர்.
புயலின் கோரத்தாண்டவம் முடிந்து, பெரும்பாதிப்பு ஏற்பட்டதால் இரண்டு, மூன்று நாட்கள் உறவினர் வீட்டிலே தங்கி விட்டார்கள்.
நான்காவது நாள் சொந்த வீட்டிற்கு செல்ல தயாரானார்கள். அப்போதுதான் மனைவிக்கு வீட்டுச் சாவியை பற்றிய நினைவு வந்தது. தனது கைப்பையை தோண்டித்துழாவிப் பார்த்தாள். சாவியே இல்லை.
சாவியை காணவில்லை என்று கணவரிடம் சொன்னால் பதற்றப்படுவார், கண்டபடி திட்டவும் செய்வார் என்பதால் அமைதிகாத்த அவள், நினைவுக்கு வந்த கடவுள்களை எல்லாம் பிரார்த்தித்தாள். கார் அவர்கள் வீட்டு முன்னால் போய் நின்றது.
ஓடிப் போய் கதவை தள்ளினாள், திறந்து கொண்டது. புயல் பயத்தில் கதவை பூட்டாமல் வந்துவிட்டது அப்போதுதான் அரைகுறையாக நினைவுக்கு வந்தது. பீரோ திறந்திருந்தது. நகைகளும், பணமும் மாயமாகியிருந்தது. டி.வி., கம்ப்யூட்டர் போன்றவைகளைகூட திருடர்கள் கழற்றி எடுத்துக்கொண்டு சென்றிருந்தார்கள். படுக்கைஅறையில் அவர்கள் ‘தூங்கி பொழுதை கழித்த’ அடையாளங்களும் தென்பட்டன.
அதிர்ச்சியோடு பக்கத்து வீட்டுக்காரர்களிடம் விசாரித்தபோது, ‘உங்கள் வீட்டில் இரண்டு ஆண்களும், ஒரு பெண்ணும் கிட்டத்தட்ட இரண்டு நாட்கள் தங்கியிருந்தார்கள். முதலில் அவர்களை உங்கள் உறவினர்கள் என்று நினைத்தோம். கடைசி நாளில் கையில் சில பொருட்களையும் அவர்கள் தூக்கிச்சென்றதால் சந்தேகம் வந்தது. உங்களுக்கு போன் போட்டோம். ஒட்டுமொத்தமாக செல்போன் தொடர்பு இல்லாததால் உங்கள் ‘லைன்’ கிடைக்கவே இல்லை’ என்றார்கள்.
கணவனும், மனைவியும் என்ன செய்வதென்று தெரியாமல் கண் கலங்க கேட்டுக் கொண்டிருந்தார்கள்.
திருட்டுக்கூட்டம் ஜோடிபோட்டு திட்டமிட்டு சுற்றுது! திருடும் இடத்தில் ‘குடும்பமும்’ நடத்துது! புயலோ, பெருமழையோ, வேறுவிதமான பாதிப்போ எதுவாக இருந்தாலும் பதற்றமடையாமல் நிதானமாக வீட்டை பூட்டிவிட்டு செல்லுங்கள்.
– உஷாரு வரும்.

Next Story