ஓசூரில், 2 பெண்கள் கொலை வழக்கு: 6 மாதங்கள் ஆகியும் துப்பு துலங்காததால் போலீசார் திணறல்
ஓசூரில் 2 பெண்கள் கொலை செய்யப்பட்ட வழக்கில் 6 மாதங்கள் ஆகியும் துப்பு துலங்காததால் போலீசார் திணறி வருகின்றனர். நகைக்காக பெண் கொலை ஓசூர் மத்திகிரி டைட்டான் டவுன்சிப்பை சேர்ந்தவர் வெங்கடேச மூர்த்தி (வயது 68). மளிகை கடை நடத்தி வருகிறார். அவரது மனைவி வசந
மத்திகிரி,
ஓசூரில் 2 பெண்கள் கொலை செய்யப்பட்ட வழக்கில் 6 மாதங்கள் ஆகியும் துப்பு துலங்காததால் போலீசார் திணறி வருகின்றனர்.
நகைக்காக பெண் கொலைஓசூர் மத்திகிரி டைட்டான் டவுன்சிப்பை சேர்ந்தவர் வெங்கடேச மூர்த்தி (வயது 68). மளிகை கடை நடத்தி வருகிறார். அவரது மனைவி வசந்தா (60). மகன் ராம்பிரசாத் (32). கடந்த ஜூன் மாதம் 1–ந் தேதி வெங்கடேசமூர்த்தியும், அவரது மகன் ராம்பிரசாத்தும் மளிகை கடைக்கு வியாபாரத்தை கவனிக்க சென்று விட்டனர்.
வீட்டில் தனியாக இருந்த வசந்தாவை மர்ம ஆசாமிகள் கழுத்தை அறுத்து கொலை செய்து 8 பவுன் நகையை கொள்ளையடித்து சென்றனர். இந்த கொலை தொடர்பாக மத்திகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்றொரு கொலைஓசூர் விகாஸ் நகரைச் சேர்ந்தவர் பாலாஜி. தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி தீபா (36). கடந்த ஜூன் மாதம் 20–ந் தேதி பாலாஜி வேலைக்கு சென்று விட்டார். அவரது மகள்கள் 2 பேரும் பள்ளிக்கு சென்று விட்டனர். தீபாவின் மாமியார் வரலட்சுமி மருந்து வாங்க கடைக்கு சென்றார். இந்த நேரத்தில் மர்ம ஆசாமிகள் யாரோ தீபாவை கழுத்தை அறுத்து கொலை செய்தனர். இது தொடர்பாகவும் மத்திகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆனால் இந்த 2 பெண்கள் கொலை செய்யப்பட்டு 6 மாதங்கள் ஆகியும் இதுவரை எந்த துப்பும் துலங்காததால் போலீசார் திணறி வருகின்றனர். வசந்தா கொலையை போன்று, தீபா கொலையும் பணம், நகைக்காக நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தாமஸ் எங்கே?இந்த 2 பெண்கள் கொலை தொடர்பாக 6 மாதமாக போலீசார் ஓசூர் மத்திகிரி டைட்டான் டவுன்சிப், விகாஸ் நகர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் விசாரணை மேற்கொண்டும் எந்த முன்னேற்றமும் இல்லை. மேலும் சம்பவத்தன்று அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களில் பதிவாகி உள்ள பதிவுகளை வைத்து போலீசார் ஆய்வு நடத்தி வருகிறார்கள்.
இதே போல ஓசூரில் தமிழ்நாடு விசுவ இந்து பரிஷத் மாவட்ட செயலாளர் சூரி கடந்த செப்டம்பர் மாதம் 19–ந் தேதி ரெயில் நிலையம் எதிரில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அந்த வழக்கில் 3 பேர் சரண் அடைந்துள்ள நிலையில் முக்கிய குற்றவாளியான பெங்களூருவைச் சேர்ந்த ரவுடி தாமஸ் இன்னும் பிடிபடவில்லை. கடந்த 3 மாதங்களாக தலைமறைவாக உள்ள அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.