கடலூர் முதுநகர் அருகே தனியார் கம்பெனி ஊழியருக்கு அரிவாள் வெட்டு 5 வாலிபர்கள் கைது


கடலூர் முதுநகர் அருகே தனியார் கம்பெனி ஊழியருக்கு அரிவாள் வெட்டு 5 வாலிபர்கள் கைது
x
தினத்தந்தி 26 Dec 2016 4:15 AM IST (Updated: 25 Dec 2016 9:18 PM IST)
t-max-icont-min-icon

கடலூர் முதுநகர் அருகே தனியார் கம்பெனி ஊழியரை அரிவாளால் வெட்டியது தொடர்பாக 5 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். அரிவாள் வெட்டு கடலூர் முதுநகர் அருகே உள்ள நாகம்மாள்பேட்டை காலனியை சேர்ந்த கலியன் மகன் வீரசெல்வம்(வயது 29). இவர் கடலூர் சிப்காட் பகுதியில் உள

கடலூர் முதுநகர்,

கடலூர் முதுநகர் அருகே தனியார் கம்பெனி ஊழியரை அரிவாளால் வெட்டியது தொடர்பாக 5 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

அரிவாள் வெட்டு

கடலூர் முதுநகர் அருகே உள்ள நாகம்மாள்பேட்டை காலனியை சேர்ந்த கலியன் மகன் வீரசெல்வம்(வயது 29). இவர் கடலூர் சிப்காட் பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் வடிவமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார்.

சம்பத்தன்று இரவு வீரசெல்வம் பணிமுடிந்து பஸ்சில் சேடப்பாளையம் பஸ் நிறுத்தத்தில் வந்து இறங்கினார். அப்போது அங்கே நின்ற ஒரு கும்பல் அவரை அரிவாளால் வெட்டியது. இதில் தலையில் படுகாயம் அடைந்த வீரசெல்வத்தை சிகிச்சைக்காக அக்கம் பக்கத்தினர் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இது குறித்த புகாரின் பேரில் கடலூர் முதுநகர் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் சம்பத் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தினார்.

5 பேர் கைது

விசாரணையில், காமராஜர் காலனியை சேர்ந்தவர்களுக்கும், நாகம்மாள்பேட்டை காலனியை சேர்ந்தவர்களுக்கும் ஏற்பட்ட தகராறு காரணமான முன்விரோதம் இருந்து வந்ததும், இதன் காரணமாக காமராஜர் காலனியை சேர்ந்தவர்கள் அரிவாளால் வீரசெல்வத்தை வெட்டியதும் தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக காமராஜர் காலனியைசேர்ந்த அருள்(24), அன்பழகன்(21), சிவா என்கிற சிவநாதன்(21), அஜித்குமார்(19), ராமு(19) ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.


Next Story