விருத்தாசலம் ரெயில்வே மேம்பாலத்தில் விபத்து 40 அடி பள்ளத்தில் கார்கள் கவிழ்ந்தன 5 பேர் படுகாயம்


விருத்தாசலம் ரெயில்வே மேம்பாலத்தில் விபத்து 40 அடி பள்ளத்தில் கார்கள் கவிழ்ந்தன 5 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 26 Dec 2016 4:30 AM IST (Updated: 25 Dec 2016 9:19 PM IST)
t-max-icont-min-icon

விருத்தாசலம் ரெயில்வே மேம்பாலத்தில் நடந்த விபத்தில் 40 அடி பள்ளத்தில் 2 கார்கள் கவிழ்ந்தது. இதில் 5 பேர் படுகாயமடைந்தனர். வியாபாரி குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்தவர் செல்வக்குமார்(வயது 34). வியாபாரியான இவர் நேற்று முன்தினம் இரவு தனது மனைவி, மகள், உறவினர்

விருத்தாசலம்,

விருத்தாசலம் ரெயில்வே மேம்பாலத்தில் நடந்த விபத்தில் 40 அடி பள்ளத்தில் 2 கார்கள் கவிழ்ந்தது. இதில் 5 பேர் படுகாயமடைந்தனர்.

வியாபாரி

குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்தவர் செல்வக்குமார்(வயது 34). வியாபாரியான இவர் நேற்று முன்தினம் இரவு தனது மனைவி, மகள், உறவினர் ஒருவருடன் குறிஞ்சிப்பாடியில் இருந்து கரூர் நோக்கி காரில் புறப்பட்டார்.

பெங்களூரு டிபன்ஸ் காலனியைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணா(40). செல்போன் கம்பெனி ஊழியர். இவர் தன்னுடைய மனைவி லாவண்யா, மகன்கள் அபிஷேக்(15), ஹேமந்த்(7) ஆகியோருடன் ஒரு காரில் கும்பகோணம் நோக்கி வந்து கொண்டிருந்தார். காரை ராமகிருஷ்ணா ஓட்டினார்.

விபத்து

இந்த 2 கார்களும் இரவு 11 மணி அளவில் விருத்தாசலம் புறவழிச்சாலை ரெயில்வே மேம்பாலத்தில் வந்து கொண்டிருந்தன. அப்போது மேம்பாலத்தின் ஓரத்தில் ஜல்லி கற்கள் கொட்டி வைக்கப்பட்டிருந்தது. அந்த கற்கள் மீது மோதாமல் இருப்பதற்காக ராமகிருஷ்ணா, தனது காரை திருப்பினார். அப்போது எதிரே வந்த செல்வக்குமாரின் கார் மீது ராமகிருஷ்ணாவின் கார் மோதி, மேம்பாலத்தையொட்டியுள்ள 40 அடி பள்ளத்தில் பாய்ந்தது. கார் மோதிய வேகத்தல் தறிகெட்டு ஒடிய செல்வக்குமாரின் காரும் சாலையில் உருண்டபடி 40 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. சினிமாவை மிஞ்சும் வகையில் நடந்த இந்த விபத்தில் 2 கார்களும் சேதமடைந்தன.

5 பேர் படுகாயம்

கார்களில் பயணம் செய்த ராமகிருஷ்ணாவின் மனைவி லாவண்யா, மகன் ஹேமந்த், செல்வக்குமாரின் மனைவி, மகள், உறவினர் ஆகிய 5 பேரும் படுகாயம் அடைந்தனர். உடனடியாக அவர்கள் சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் 3 பேர் காயமின்றி உயிர் தப்பினர். விபத்து குறித்து விருத்தாசலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story