காங்கேயநல்லூர் கோவில் அருகே உயர்கோபுர மின்விளக்கு நடுரோட்டில் விழுந்தது அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை


காங்கேயநல்லூர் கோவில் அருகே உயர்கோபுர மின்விளக்கு நடுரோட்டில் விழுந்தது அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை
x
தினத்தந்தி 26 Dec 2016 4:15 AM IST (Updated: 25 Dec 2016 11:35 PM IST)
t-max-icont-min-icon

காட்பாடி காங்கேயநல்லூர் கோவில் அருகே உயர்கோபுர மின்விளக்கு உடைந்து விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உயர்கோபுர மின்விளக்கு காட்பாடி காங்கேயநல்லூர் கிருபானந்தவாரியார் அவதரித்த புண்ணிய ஸ்தலமாகும். இங்கு நகரின் மையப்பகுதியில் சுப்பிரமணியசாமி

காட்பாடி,

காட்பாடி காங்கேயநல்லூர் கோவில் அருகே உயர்கோபுர மின்விளக்கு உடைந்து விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

உயர்கோபுர மின்விளக்கு

காட்பாடி காங்கேயநல்லூர் கிருபானந்தவாரியார் அவதரித்த புண்ணிய ஸ்தலமாகும். இங்கு நகரின் மையப்பகுதியில் சுப்பிரமணியசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலின் எதிரே கிருபானந்த வாரியாரின் ஞானத் திருவளாகம் இருக்கிறது. கோவில் அருகே கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு உயர்கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டது.

இந்த மின்விளக்கு கால்வாய் அருகில் இருந்ததால், கால்வாய் நிரம்பி தண்ணீர் வழிந்து வரும்போது கோபுரத்தின் அடிப்பகுதி துருப்பிடித்து வந்தது. சமீபத்தில் பெய்த புயல் மழையால் மின்கம்பம் மேலும் சேதம் அடைந்திருந்தது.

இந்த நிலையில் நேற்று காலையில் திடீரென பலத்த சத்தத்துடன் மின்விளக்குகம்பம் உடைந்து நடுரோட்டில் விழுந்தது. அப்போது கம்பத்தின் மேல் பகுதி எதிரே இருந்த பஜனை மடத்தின் மேற்கூரையில் விழுந்ததால் அசம்பாவிதம் எதுவும் ஏற்படவில்லை.

அலறியடித்து ஓட்டம்

அருகிலேயே டீக்கடை இருப்பதால் டீக்கடையில் டீ குடித்துக் கொண்டிருந்த பொதுமக்கள், கம்பம் விழுந்ததும் அலறியடித்துக் கொண்டு ஓடினர். கம்பம் சாலையில் விழுந்ததால் அந்த வழியாக இருசக்கர வாகனங்கள், 4 சக்கர வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதாலும், ஞானத் திருவளாகத்தில் மண்டல பூஜை நிறைவு விழா நடந்ததாலும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கும், ஞானத் திருவளாகத்திற்கும் வந்தனர். அவர்கள் இந்த பாதையை தவிர்த்து மற்றொரு பாதை வழியாக கோவிலுக்கு சென்றனர்.

ரோட்டில் விழுந்த உயர்கோபுர மின்விளக்கு கம்பத்தை அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.


Next Story