தஞ்சையில் வாஜ்பாய் பிறந்தநாள் கொண்டாட்டம்
முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 92–வது பிறந்த நாள் விழா தஞ்சை பழைய பஸ் நிலையம் முன்பு பாரதீய ஜனதா கட்சி சார்பில் நேற்று கொண்டாடப்பட்டது. விழாவிற்கு மாநகர தலைவர் விநாயகம் தலைமை தாங்கினார். பாரதீய ஜனதா கட்சி கொடியை முன்னாள் மாநில துணைத் தலைவர் எம்.எஸ்.ராமலிங்கம
தஞ்சாவூர்,
முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 92–வது பிறந்த நாள் விழா தஞ்சை பழைய பஸ் நிலையம் முன்பு பாரதீய ஜனதா கட்சி சார்பில் நேற்று கொண்டாடப்பட்டது. விழாவிற்கு மாநகர தலைவர் விநாயகம் தலைமை தாங்கினார். பாரதீய ஜனதா கட்சி கொடியை முன்னாள் மாநில துணைத் தலைவர் எம்.எஸ்.ராமலிங்கம் ஏற்றி வைத்தார். இதில் மாநில அமைப்புசாரா பிரிவு தலைவர் பாண்டித்துரை கலந்து கொண்டு பேசினார்.கூட்டத்தில் மாவட்ட செயலாளர் ஜெய்சதீஷ், பொருளாளர் ரெங்கராஜன், பொதுச் செயலாளர் உமாபதி, மாநகர செயலாளர் சாந்தி, மாவட்ட துணைத் தலைவர் வெங்கடலட்சுமி, ஒன்றிய தலைவர் ராஜேஸ்வரன், மாநகர பொதுச் செயலாளர் ராஜன், நிர்வாகிகள் செல்லதுரை, ரவி, பாலசெல்வம், சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். விழாவையொட்டி பொதுமக்களுக்கு சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது. பின்னர் மத்தியஅரசின் சாதனைகளை விளக்கி தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது. இதில் ஏராளமான பாரதீய ஜனதா கட்சியினர் கலந்து கொண்டனர்.