மோட்டார் சைக்கிள்–வேன் மோதல் பால் வியாபாரி உள்பட 2 பேர் பலி தஞ்சையில் பரிதாபம்


மோட்டார் சைக்கிள்–வேன் மோதல் பால் வியாபாரி உள்பட 2 பேர் பலி தஞ்சையில் பரிதாபம்
x
தினத்தந்தி 26 Dec 2016 4:45 AM IST (Updated: 25 Dec 2016 9:50 PM IST)
t-max-icont-min-icon

தஞ்சையில் மோட்டார் சைக்கிள்–வேன் மோதிய விபத்தில் பால் வியாபாரி உள்பட 2 பேர் பரிதாபமாக பலியானார்கள். விபத்தில் 2 பேர் பலி தஞ்சை கீழவஸ்தாசாவடி பகுதியில் வசித்து வந்தவர் ஆரோக்கிய அடைக்கலராஜ்(வயது51). பால்வியாபாரி. இவரும், அதே பகுதியை சேர்ந்த விவசாயி நாகரா

தஞ்சாவூர்,

தஞ்சையில் மோட்டார் சைக்கிள்–வேன் மோதிய விபத்தில் பால் வியாபாரி உள்பட 2 பேர் பரிதாபமாக பலியானார்கள்.

விபத்தில் 2 பேர் பலி

தஞ்சை கீழவஸ்தாசாவடி பகுதியில் வசித்து வந்தவர் ஆரோக்கிய அடைக்கலராஜ்(வயது51). பால்வியாபாரி. இவரும், அதே பகுதியை சேர்ந்த விவசாயி நாகராஜ்(50) என்பவரும் நண்பர்கள். நேற்றுஅதிகாலை 5.30 மணி அளவில் ஆரோக்கிய அடைக்கலராஜும், நாகராஜும் ஒரே மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றனர். தஞ்சை ஞானம்நகர் அருகே உள்ள பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது வல்லத்தில் இருந்து மாரியம்மன்கோவில் நோக்கி வேன் ஒன்று வந்து கொண்டிருந்தது. இந்த வேனை வல்லம் வளையல்காரத்தெருவை சேர்ந்த கவுரிசங்கர் ஓட்டி வந்தார்.

மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள், அணுகுசாலையில் செல்ல முயற்சி செய்தனர். அப்போது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிளும், வேனும் நேருக்கு நேர் மோதி கொண்டன. இதில் படுகாயம் அடைந்த ஆரோக்கிய அடைக்கலராஜ், நாகராஜ் ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த தஞ்சை தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் பலியான 2 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீஸ் விசாரணை

இந்த விபத்து குறித்து தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி, சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் விருத்தாசலம் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து வேன் டிரைவர் வல்லம் வளையல்காரத்தெருவை சேர்ந்த கவுரிசங்கரிடம்(32) விசாரணை நடத்தினர். அதில் மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் தவறான பாதையில் சென்றதால் வேன் மோதி பலியானது தெரியவந்தது. மேலும் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 15 நாட்களுக்கு முன்பு இதே பகுதியில் தான் தவறான பாதையில் மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் சென்றனர். இதை பார்த்தவுடன் எதிரே வந்த காரை டிரைவர் நிறுத்தினார். ஆனால் வந்த வேகத்தில் கார் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் 2 வாலிபர்களும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். எனவே இந்த பகுதியில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் வைக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.


Next Story