நெல்லை அருகே பஸ் மோதி தனியார் நிறுவன ஊழியர் பலி


நெல்லை அருகே பஸ் மோதி தனியார் நிறுவன ஊழியர் பலி
x
தினத்தந்தி 26 Dec 2016 4:00 AM IST (Updated: 25 Dec 2016 10:05 PM IST)
t-max-icont-min-icon

நெல்லை அருகே பஸ் மோதி தனியார் நிறுவன ஊழியர் பலியானார். தனியார் நிறுவன ஊழியர் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள நம்பியூர் காந்திபுரத்தை சேர்ந்தவர் சவுந்திரராஜன். இவருடைய மகன் சதீஷ்குமார்(வயது 27). இவர் நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் சிப்காட் வ

நெல்லை,

நெல்லை அருகே பஸ் மோதி தனியார் நிறுவன ஊழியர் பலியானார்.

தனியார் நிறுவன ஊழியர்

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள நம்பியூர் காந்திபுரத்தை சேர்ந்தவர் சவுந்திரராஜன். இவருடைய மகன் சதீஷ்குமார்(வயது 27). இவர் நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

தாழையூத்து பகுதியில் நண்பர்களுடன் வீடு எடுத்து தங்கி வேலை செய்து வந்தார். இவர் நேற்று நெல்லையில் உள்ள ஒரு நண்பரை பார்த்து விட்டு மோட்டார் சைக்கிளில் தாழையூத்தை நோக்கி சென்று கொண்டு இருந்தார்.

பஸ் மோதி பலி

ஒரு தனியார் மில் அருகே சென்று கொண்டு இருந்தபோது எதிரே வந்த பஸ், மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் பலத்த காயம் அடைந்த சதீஷ்குமார் சம்பவ இடத்திலேயே துடி, துடித்து பரிதாபமாக இறந்தார்.

தகவல் அறிந்த தாழையூத்து போலீஸ் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) ஆவுடையப்பன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சதீஷ்குமார் உடலை மீட்டு பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து தாழையூத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story