வேலுநாச்சியார் நினைவிடத்தில் அரசியல் கட்சியினர் அஞ்சலி


வேலுநாச்சியார் நினைவிடத்தில் அரசியல் கட்சியினர் அஞ்சலி
x
தினத்தந்தி 26 Dec 2016 4:00 AM IST (Updated: 25 Dec 2016 10:19 PM IST)
t-max-icont-min-icon

வேலுநாச்சியார் நினைவு தினத்தையொட்டி சிவகங்கையில் உள்ள நினைவிடத்தில் அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்புகள் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. வேலுநாச்சியார் ஆங்கிலேயர்களை எதிர்த்து முதல் சுதந்திர போரை தொடங்கியவரும், சிவகங்கையை ஆண்டவருமான ராணி வேலுநாச்சிய

சிவகங்கை,

வேலுநாச்சியார் நினைவு தினத்தையொட்டி சிவகங்கையில் உள்ள நினைவிடத்தில் அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்புகள் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

வேலுநாச்சியார்

ஆங்கிலேயர்களை எதிர்த்து முதல் சுதந்திர போரை தொடங்கியவரும், சிவகங்கையை ஆண்டவருமான ராணி வேலுநாச்சியாரின் 220–வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி சிவகங்கை அரண்மனை வாசலில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில், சிவகங்கை சமஸ்தான தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் ராணி மதுராந்தகி நாச்சியார் சார்பில் தேவஸ்தான மேலாளர் இளங்கோ, மன்னர் பள்ளி செயலாளர் குமரகுரு மற்றும் தேவஸ்தான ஊழியர்கள், மன்னர் பள்ளி ஆசிரியர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இதனைத்தொடர்ந்து ராணி வேலுநாச்சியார் பேரவை சார்பில் கோபால் துரை, திருப்பதி துரை, மணிமுத்து, அதிபதி ராஜா உள்ளிட்டவர்கள் மலர் அஞ்சலி செலுத்தினர்.

அ.தி.மு.க., தி.மு.க.

இதேபோல் அ.தி.மு.க. சார்பில் நகர செயலாளர் ஆனந்தன் தலைமையில் முன்னாள் நகர்மன்ற தலைவர் அர்ச்சுனன், கே.வி.சேகர், அன்புமணி, ஜெயகுமார் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். பா.ஜ.க. சார்பில் ராஜேந்திரன், கருப்பையா, முத்துராமலிங்கம் ஆகியோரும், தி.மு.க. சார்பில் நகர செயலாளர் ஆனந்த், வக்கீல் அழகர்சாமி, ஜெயகாந்தன் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.

அஞ்சலி

மேலும் மூவேந்தர் முன்னேற்ற கழகம் சார்பில் ரவி வாண்டையார், வைபவ் வாண்டையார், மாநில நிர்வாகிகள் செல்வராஜ், நாகலிங்கம், ராஜா, மாவட்ட தலைவர் விஸ்வநாதன் ஆகியோரும், தமிழ்நாடு தேவர் பேரவை தலைவர் முத்தையா தேவர் தலைமையில் அந்த அமைப்பை சேர்ந்தவர்களும், பசும்பொன் தேவர் கழகம் சார்பில் தலைவர் ஜோதி முத்துராமலிங்கம், அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம் சார்பில் மாநில நிர்வாகி எஸ்.ஆர்.தேவர் தலைமையில் மாவட்ட செயலாளர் ராஜா, தமிழரசன் ஆகியோரும், முக்குலத்தோர் பாசறை மாநில பொருளாளர் இந்திரகுமார் ஆகியோரும் வேலுநாச்சியார் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.

நினைவு தினத்தையொட்டி ராணி வேலுநாச்சியார் பேரவை சார்பில் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.


Next Story