வீட்டில் சந்தன மரங்கள் வளர்க்கலாம் மாவட்ட வன அதிகாரி தகவல்


வீட்டில் சந்தன மரங்கள் வளர்க்கலாம் மாவட்ட வன அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 25 Dec 2016 10:23 PM IST (Updated: 25 Dec 2016 10:22 PM IST)
t-max-icont-min-icon

வீட்டில் சந்தன மரங்களை வளர்த்து பயன் பெறலாம் என மாவட்ட வன அதிகாரி கூறினார். கிறிஸ்துமஸ் விழா சர்வமத வக்கீல்கள் சங்கம், லயன்ஸ் கிளப் ஆப் மதுரை காஸ்மாஸ் மற்றும் கனவுக்கு செயல் கொடுப்போம் அறக்கட்டளை ஆகியவற்றின் சார்பில் கிறிஸ்துமஸ் தின விழாவை முன்னிட்டு ஏ

மதுரை,

வீட்டில் சந்தன மரங்களை வளர்த்து பயன் பெறலாம் என மாவட்ட வன அதிகாரி கூறினார்.

கிறிஸ்துமஸ் விழா

சர்வமத வக்கீல்கள் சங்கம், லயன்ஸ் கிளப் ஆப் மதுரை காஸ்மாஸ் மற்றும் கனவுக்கு செயல் கொடுப்போம் அறக்கட்டளை ஆகியவற்றின் சார்பில் கிறிஸ்துமஸ் தின விழாவை முன்னிட்டு ஏழை குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா விக்டோரியா எட்வர்டு மன்றத்தில் நடைபெற்றது. எட்வர்டு மன்ற செயலாளர் இஸ்மாயில் தலைமை தாங்கினார். மூத்த வக்கீல்கள் மோகன்தாஸ், சுல்தான் அலாவுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போதகர் சாமுவேல் செல்லப்பா இறை அருளுரை வழங்கினார். சர்வமத வக்கீல்கள் சங்க தலைவர் முத்துகுமார் வரவேற்றார். நிகழ்ச்சியில், விருதுநகர் மாவட்ட வன அதிகாரி ராஜ்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:–

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட குழந்தைகளுக்கு தலா ஒரு சந்தன மரம் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. இந்த மரங்களை அவர்கள் சிறந்த முறையில் வளர்ப்பதன் மூலம் வருங்காலங்களில் அது அவர்களுக்கு அதிக அளவு வருவாயை ஈட்டி தரும். இந்தியாவில் தற்போது சந்தன மரங்கள் வேகமாக அழிந்துவரும் வகையில் உள்ளது. 7 வகையான சந்தன மரங்கள் இருந்த நிலையில் தற்போது அவை அனைத்தும் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன.

பிரச்சினை இல்லை...

அதனை தடுக்கும் விதமாக பள்ளி குழந்தைகள் அனைவருக்கும் சந்தன மரங்கள் மாவட்ட வனத்துறை சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. அவர்கள் தங்களது வீடுகளில் அந்த மரங்களை நட்டு வைத்து அதனை பராமரிக்க வேண்டும். நாளடையில் அவைகள் நன்றாக வளர்ந்த பின்னர் வனத்துறையினர் பணம் செலுத்தி அவற்றை பெற்று கொள்வார்கள். வீடுகளில் சந்தன மரங்கள் வளர்ப்பதால் எந்தவித பிரச்சினையும் கிடையாது.

சுமார் 10 கிலோ எடை கொண்ட சந்தன மரங்களை வளர்த்தால் போதும். ஒரு கிலோ ரூ.10 ஆயிரத்திற்கு விற்பனையாகி வருகிறது. இதில் 80 சதவீத பணத்தினை நீங்கள் பெற்று கொள்ளலாம். மீதமுள்ள 20 சதவீத பணம் போக்குவரத்து செலவு மற்றும் மரத்தினை சுத்தம் செய்ய பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியின் முடிவில் கனவுக்கு செயல் கொடுப்போம் அறக்கட்டளை நிர்வாகி சபரி சங்கர் நன்றி கூறினார்.


Next Story