லஞ்சம், அலட்சிய போக்கால் அரசு மருத்துவமனையில் பிறந்து 4 நாட்கள் ஆன ஆண் குழந்தை சாவு டாக்டர்கள் மீது பெற்றோர் புகார்
உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் பிறந்து 4 நாட்களே ஆன ஆண் குழந்தை இறந்தது. இதுகுறித்து குழந்தையின் பெற்றோர், டாக்டர்களின் அலட்சிய போக்கு, லஞ்சம் கொடுக்காததால் சிகிச்சை அளிக்கவில்லை என்று போலீசில் புகார் செய்தனர். அரசு ஆஸ்பத்திரி உசிம்பட்டி அருகே உள
உசிலம்பட்டி,
உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் பிறந்து 4 நாட்களே ஆன ஆண் குழந்தை இறந்தது. இதுகுறித்து குழந்தையின் பெற்றோர், டாக்டர்களின் அலட்சிய போக்கு, லஞ்சம் கொடுக்காததால் சிகிச்சை அளிக்கவில்லை என்று போலீசில் புகார் செய்தனர்.
அரசு ஆஸ்பத்திரிஉசிம்பட்டி அருகே உள்ளது புத்து£ர். இந்த ஊரைச் சேர்ந்தவர் கண்ணன். இவருக்கும் அன்னம்பாரிபட்டியைச் சேர்ந்த சின்னன்–பாண்டியம்மாள் ஆகியோரின் மகள் அனுசியாதேவிக்கும் கடந்த ஆறு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. கணவன், மனைவி இருவரும் திருப்பூரில் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகின்றனார். இந்தநிலையில் அனுசியாதேவி கற்பமானார். தலைப்பிரசவத்திற்காக அன்னம்பாரிபட்டியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு வந்தார்.
அதைத்தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் உத்தப்பநாயக்கனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் பிரசவ வலி ஏற்பட்டதால் உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் அனுசியா சேர்க்கப்பட்டார். அவருக்கு கடந்த 22–ந்தேதி ஆண் குழந்தை பிறந்து, நல்ல ஆரோக்கியத்துடன் இருந்து வந்தது.
குழந்தை சாவுஇந்தநிலையில் நேற்று குழந்தையின் உடல்நிலை சரியில்லாமல் போனது. இதனால் பதறிப்போன குழந்தையின் தாய் நர்சுகளிடம் கூறியுள்ளார். அதற்கு குழந்தைகள் டாக்டர் வரும் வரை, குழந்தையை தொட்டியில் போட்டு விட்டு செல்லுங்கள் என்று நர்சுகள் கூறினராம். பின்னர் வெகு நேரம் கழித்து வந்த டாக்டர், குழந்தை பரிசோதனை செய்து பார்த்து விட்டு, குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். அதைத்தொடர்ந்து அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதுகுறித்து குழந்தையின் தந்தை கண்ணன் உசிலம்பட்டி நகர் போலீசில் புகார் செய்தார். அதில் உசிலம்பட்டி அரசு மருத்துவமனையின் டாக்டர்களின் அலட்சியப் போக்காலும், நர்சுகள் லஞ்சம் பெறும் நோக்கத்திலும் நடந்து கொண்டனர். இதனால் ஆரோக்கியமாக பிறந்த குழந்தை இறந்து விட்டது. எனவே எனது ஆண் குழந்தையின் இறப்பிற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். புகாரின் பேரில் உசிலம்பட்டி போலீஸ் துணை சூப்பிரண்டு ராமகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் விநாயகம் உள்ளிட்ட போலீசார் அரசு மருத்துவமனைக்கு சென்று விசாரணை செய்தனர்.
லஞ்சம்மேலும் கண்ணன் மற்றும் அவருடைய மாமியார் பாண்டியம்மாள் ஆகியோர் கூறியதாவது:– அனுசியாதேவியை கடந்த 22–ந்தேதி பிரசவத்திற்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தோம். அங்கு ஆண் குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் பிறந்தது. இந்தநிலையில் ஆண் குழந்தை பிறந்ததால், நர்சுகள் லஞ்சம் கேட்டனர். நாங்கள் ஆயிரம் ரூபாய் மட்டும் தான் கொடுத்தோம்.
ஆனால் அவர்கள் கேட்ட மொத்த பணத்தையும் கொடுக்காததால், நேற்று குழந்தை உடல் நலம் சரியில்லாதது குறித்து சொன்ன போது, முறையான சிகிச்சை அளிக்காமல் அலட்சியத்துடன் நடந்து கொண்டனர். அதனால் தான் எங்கள் குழந்தை இறந்து விட்டது. திருமணமாகி 5 ஆண்டுகளுக்கு பிறகு ஆண்குழந்தை பிறந்தது என்ற மகிழ்ச்சியில் இருந்தோம். ஆனால் எங்கள் மகிழ்ச்சியை, குழந்தையின் இறப்பு இழக்க செய்து விட்டது என்று வேதனையுடன் கூறினர்.
இதுகுறித்து மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் பாலமுரளி, மருத்துவமனை நிலைய அலுவலர் டாக்டர் பாரதி ஆகியோர் இறந்த குழந்தையின் உறவினர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அதில் சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களிடம் விசாரணை செய்து அவர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். மேலும் இனிமேல் இது போன்ற தவறுகள் நடக்காமல் இருக்க தேவையா நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர்.