திருமண ஆசைகாட்டி பிளஸ்–1 மாணவியை கடத்திய கல்லூரி மாணவர் கைது


திருமண ஆசைகாட்டி பிளஸ்–1 மாணவியை கடத்திய கல்லூரி மாணவர் கைது
x
தினத்தந்தி 25 Dec 2016 11:17 PM IST (Updated: 25 Dec 2016 11:16 PM IST)
t-max-icont-min-icon

ராசிபுரம் அருகேயுள்ள மலையாம்பாளையம் ஆதிதிராவிடர் தெருவைச் சேர்ந்தவர் குமார். கூலி தொழிலாளி. இவரது மகன் கண்ணன் (வயது 21). இவர் ராசிபுரம் அருகேயுள்ள திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரியில் பி.ஏ. வரலாறு 2–ம் ஆண்டு படிக்கிறார். இவர் கடந்த 22–ந் தேதி அதே பகுதியை ச

ராசிபுரம்,

ராசிபுரம் அருகேயுள்ள மலையாம்பாளையம் ஆதிதிராவிடர் தெருவைச் சேர்ந்தவர் குமார். கூலி தொழிலாளி. இவரது மகன் கண்ணன் (வயது 21). இவர் ராசிபுரம் அருகேயுள்ள திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரியில் பி.ஏ. வரலாறு 2–ம் ஆண்டு படிக்கிறார். இவர் கடந்த 22–ந் தேதி அதே பகுதியை சேர்ந்த 16 வயது பிளஸ்–1 மாணவியை திருமண ஆசைகாட்டி கடத்தி சென்றுவிட்டார். இதுகுறித்து ராசிபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் ராசிபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்ணனை தேடி வந்தனர். இந்த நிலையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜாகீரா பேகம் மற்றும் போலீசார் நேற்று ஆண்டகளூர்கேட்டில் நின்று கொண்டிருந்த கல்லூரி மாணவர் கண்ணனை கைது செய்து, மாணவியை மீட்டனர்.


Next Story