மன்னார்குடி–பட்டுக்கோட்டை அகல ரெயில்பாதை பணியை விரைந்து முடிக்க வேண்டும் வர்த்தக சங்க கூட்டத்தில் தீர்மானம்


மன்னார்குடி–பட்டுக்கோட்டை அகல ரெயில்பாதை பணியை விரைந்து முடிக்க வேண்டும் வர்த்தக சங்க கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 25 Dec 2016 11:56 PM IST (Updated: 25 Dec 2016 11:56 PM IST)
t-max-icont-min-icon

மன்னார்குடி–பட்டுக்கோட்டை அகல ரெயில்பாதை பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று வர்த்தக சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பொதுக்குழு கூட்டம் மன்னார்குடியில் வர்த்தக சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு முன்னாள் வர்த்தக தலைவர் ஞ

மன்னார்குடி,

மன்னார்குடி–பட்டுக்கோட்டை அகல ரெயில்பாதை பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று வர்த்தக சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பொதுக்குழு கூட்டம்

மன்னார்குடியில் வர்த்தக சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு முன்னாள் வர்த்தக தலைவர் ஞானசேகரன் தலைமை தாங்கினார். மாவட்ட வர்த்தக சங்க துணைத் தலைவர் சேதுராமன், மாநில மருந்து வணிகர்கள் சங்க தலைவர் சீனிவாசா ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:–

ரெயில் சேவை

150 ஆண்டுகால மன்னார்குடி நகராட்சியினை திருவாரூர் மாவட்ட தலைநகராக தமிழக அரசு அறிவிக்க வேண்டும். வங்கி சுவைப் எந்திரத்தை அனைத்து வியாபாரிகளுக்கும் அரசு இலவசமாக வழங்கவேண்டும், மன்னார்குடி மாவட்ட தலைமை மருத்துவமனையில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன், சி.டி. ஸ்கேன் வசதி ஏற்படுத்தி தரவேண்டும். மன்னார்குடியில் இருந்து பெங்களூருக்கு ரெயில் சேவை தொடங்கிடவேண்டும். மன்னார்குடி–பட்டுக்கோட்டை அகல ரெயில்பாதை பணியினை விரைந்து முடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் 2017–2018–ம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தலைவராக கே.ஜே.ஆர்.பாரதிஜிவா, செயலாளராக ஆர்.வி.ஆனந்த், பொருளாளராக சங்கரசுப்பு, அமைப்பு செயலாளராக எஸ்.எம்.டி. கருணாநிதி உள்ளிட்ட நிர்வாகிகள் ஒருமனதாக தேர்தெடுக்கப்பட்டனர்.


Next Story