ஈரோடு அருகே கோவிலில் திருட முயன்ற கொள்ளையன் அடித்துக்கொலை


ஈரோடு அருகே கோவிலில் திருட முயன்ற கொள்ளையன் அடித்துக்கொலை
x
தினத்தந்தி 26 Dec 2016 4:00 AM IST (Updated: 26 Dec 2016 12:11 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு அருகே கோவிலில் திருட முயன்ற கொள்ளையனை பொதுமக்கள் அடித்துக்கொன்றனர். இன்னொருவன் தப்பி ஓடிவிட்டான். உண்டியலை உடைத்து... ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே உள்ள வளையக்காரன்பாளையத்தில் புகழ்பெற்ற அண்ணமார் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு ஒரு

ஈரோடு,

ஈரோடு அருகே கோவிலில் திருட முயன்ற கொள்ளையனை பொதுமக்கள் அடித்துக்கொன்றனர். இன்னொருவன் தப்பி ஓடிவிட்டான்.

உண்டியலை உடைத்து...

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே உள்ள வளையக்காரன்பாளையத்தில் புகழ்பெற்ற அண்ணமார் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு ஒரு மணி அளவில் இந்த கோவிலுக்கு 2 மர்ம நபர்கள் வந்தனர். அவர்கள் கோவிலில் உள்ள கிரில் இரும்பு கதவை திறந்து உள்ளே சென்றனர். பின்னர் அங்கிருந்த உண்டியலை கடப்பாரையால் உடைத்தனர்.

இந்த சத்தம் கோவில் அருகே உள்ள வீடுகளில் தூங்கி கொண்டிருந்தவர்களுக்கு கேட்டதும், அவர்கள் திடுக்கிட்டு எழுந்தனர். அவர்களில் சிலர் கோவிலுக்கு விரைந்தனர். அப்போது கோவில் உண்டியலை 2 மர்ம நபர்கள் கடப்பாரையால் உடைத்து கொண்டிருந்தனர். அதைக் கண்டதும் அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனே அவர்கள் ‘திருடன், திருடன்’ என்று சத்தம் போட்டனர்.

பொதுமக்கள் ‘தர்ம’அடி

அவர்களுடைய சத்தம் கேட்டு அந்த பகுதியை சேர்ந்தவர்கள் ஒன்று திரண்டு கோவிலுக்கு ஓடிவந்தனர். பொதுமக்கள் ஓடி வந்ததை கண்டதும் மர்ம நபர்கள் 2 பேரும் கோவிலை விட்டு வெளியேறி தப்பி ஓடினர்.

ஆனால் பொதுமக்கள் அவர்களை பின் தொடர்ந்து விரட்டினர். இதில் ஒரு கொள்ளையன் மட்டும் பொதுமக்களிடம் வசமாக சிக்கிக்கொண்டான். இன்னொருவன் தப்பி ஓடிவிட்டான்.

பிடிபட்ட கொள்ளையனுக்கு பொதுமக்கள் ‘தர்ம’ அடி கொடுத்தனர். இதில் பலத்தகாயம் அடைந்த அவனை, அங்கிருந்த சிலர் மீட்டு பவானி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவனை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே அந்த நபர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

துணை போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு

இதுபற்றி அறிந்ததும் கவுந்தப்பாடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இறந்தவர் குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், ‘கொலை செய்யப்பட்டவர் ஈரோட்டை அடுத்த ஆர்.என்.புதூர் அருகே உள்ள சி.எம்.நகரை சேர்ந்த பழனிச்சாமி (வயது 46),’ என்பது தெரியவந்தது.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் கோபி துணை போலீஸ் சூப்பிரண்டு செல்வம், கவுந்தப்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தமூர்த்தி ஆகியோர் விரைந்து சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் அண்ணமார் கோவில் பகுதியில் பலத்த போலீஸ் பாதகாப்பு போடப்பட்டது.

கணவர் கொல்லப்பட்ட தகவல் அறிந்ததும் பழனிச்சாமியின் மனைவி சரசு மற்றும் அவருடைய உறவினர்கள் பவானி அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று இறந்த பழனிச்சாமியின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

இந்தக் கொலை தொடர்பாக பழனிச்சாமியின் மனைவி சரசு கொடுத்த புகாரின் பேரில் கவுந்தப்பாடி போலீசார் வளையக்காரன்பாளையத்தை சேர்ந்த தங்கராஜ், பழனி, தேவராஜ் மற்றும் சிலர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பி ஓடிய கொள்ளையனையும் போலீசார் தேடி வருகிறார்கள்.

இந்த நிலையில் பழனிச்சாமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் கவுந்தப்பாடி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story