கிறிஸ்துமஸ் பண்டிகை: ஊட்டி, முதுமலையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்
கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறையை முன்னிட்டு ஊட்டி, முதுமலையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். கிறிஸ்துமஸ் பண்டிகை உலகம் முழுவதும் நேற்று கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டது. இந்த பண்டிகையை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் தங்களது விடுமுறையை கழிக்க ஊட்டிக்கு அத
ஊட்டி
கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறையை முன்னிட்டு ஊட்டி, முதுமலையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
கிறிஸ்துமஸ் பண்டிகைஉலகம் முழுவதும் நேற்று கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டது. இந்த பண்டிகையை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் தங்களது விடுமுறையை கழிக்க ஊட்டிக்கு அதிகளவில் குவிந்தனர். நேற்று முன்தினம் மட்டும் அரசு தாவரவியல் பூங்காவிற்கு 9 ஆயிரத்து 700 சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர்.
நேற்று 12 ஆயிரம் சுற்றுலா பயணிகள் என கடந்த 2 நாட்களில் மட்டும் 21 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இதனால் ஊட்டி நகரம் ‘களை’ கட்டி காணப்பட்டது. மேலும் ஊட்டி படகு இல்லம், ரோஜா பூங்கா, தொட்டபெட்டா உள்ளிட்ட இடங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் காணப்பட்டது.
போக்குவரத்து நெரிசல்சுற்றுலா பயணிகள் கூட்டம் காரணமாக ஊட்டி–கூடலூர் சாலை, ஊட்டி–குன்னூர் சாலை, தாவரவியல் பூங்கா சாலை, தொட்டபெட்ட சாலை உள்ளிட்ட இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள், வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர்.
போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட இடங்களில் போலீசார் விரைந்து சென்று, போக்குவரத்தை உடனுக்குடன் சீரமைத்தனர். இதன் காரணமாக வாகனங்கள் ஊர்ந்தபடி சென்றன.
பணத்தட்டுப்பாடுமத்திய அரசு ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததை தொடர்ந்து பணத்தட்டுப்பாடு நிலவுவதால் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து காணப்பட்டது. இதன்காரணமாக வியாபாரிகள், சுற்றுலா வழிகாட்டிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ஊட்டியில் கடந்த 2 நாட்களாக சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்பட்டதால், வியாபாரிகள், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். அதே நேரத்தில் ஊட்டியில் உள்ள அனைத்து ஏ.டி.எம். மையங்களும் மூடப்பட்டு இருந்தன. இதனால் சுற்றுலா பயணிகள் பணம் எடுக்க முடியாமல் கடும் அவதி அடைந்தனர்.
முதுமலையில் குவிந்தனர்இதே போல் முதுமலையிலும் நேற்று சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் வளர்ப்பு யானைகளுக்கு உணவு வழங்கப்படுவதை பார்வையிட்டனர். மேலும் சுற்றுலா பயணிகள் வனத்துறை மூலம் நடத்தப்படும் வாகன சவாரி, யானை சவாரி செய்தும் மகிழ்ந்தனர். நீண்ட நாட்களுக்கு பின்னர் நேற்று முதுமலையில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கர்நாடகா, கேரளா சுற்றுலா பயணிகளை அதிகம் காண முடிந்தது. மேலும் சுற்றுலா பயணிகள் கூடலூர் செல்லும் சாலையோரங்களிலும், கர்நாடகா மாநிலம் பண்டிப்பூர் செல்லும் சாலையோரங்களிலும் நின்றிருந்த மான்கள் கூட்டத்தையும் கண்டு ரசித்து சென்றனர்.