கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டம்: ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி பொள்ளாச்சி பகுதியில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். கிறிஸ்துமஸ் பண்டிகை உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. பொள்ளாச்சியிலும்
பொள்ளாச்சி
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி பொள்ளாச்சி பகுதியில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.
கிறிஸ்துமஸ் பண்டிகைஉலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. பொள்ளாச்சியிலும் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டம் களைகட்டியது. கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி வால்பாறையில் உள்ள அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களும் மின்விளக்குகளால் அலங்கரிப்பட்டிருந்தது. இதையொட்டி நேற்றுமுன்தினம் நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு திருப்பலிகளும், சிறப்பு பிரார்த்தனையும் நடைபெற்றது. வால்பாறையில் உள்ள திருஇருதய ஆண்டவர் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையொட்டி நள்ளிரவு 11 மணி முதல் 12 மணி வரை கிறிஸ்து பிறப்பு கீத ஆராதனை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து ஆலய பங்குகுருக்கள் வின்சென்ட் பால்ராஜ், அலெக்ஸ் ஆண்டனிராஜ் பங்குமக்களுடன் இணைந்து ஆலயத்தில் இருந்து குழந்தை இயேசுவின் சொரூபத்தை பவனியாக எடுத்து வந்து ஆலய வளாகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த குடிலில் வைத்து வணங்கினார்கள். பின்னர் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் பாடல் திருப்பலி நடைபெற்றது.
சிறப்பு பிரார்த்தனைதிருப்பலியில் ஒருவருக்கொருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர். திருப்பலிக்கு பின் பங்கு மக்கள் அனைவருக்கும் கேக் வழங்கப்பட்டது. இதே போல் வால்பாறை சி.எஸ்.ஐ. ஆலயத்தில் நள்ளிரவு 12 மணிக்கு ஆலய தலைமை ஆயர் தர்மராஜ், உதவி ஆயர் சுரேஷ் ஆகியோர் தலைமையில் கிறிஸ்து பிறப்பு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. மேலும் வால்பாறை அருகே உள்ள முடீஸ் புனித அந்தோணியார் ஆலயத்தில் நடைபெற்ற கிறிஸ்து பிறப்பு விழாவில் ஆலய பங்குகுரு ஜார்ஜ் சகாயராஜ் குழந்தை இயேசுவின் சொரூபத்தை கைகளில் ஏந்தி பவனியாக எடுத்து சென்று பாடல் திருப்பலியை நிறைவேற்றினார். வால்பாறை அய்யர்பாடி புனித வனத்துச்சின்னப்பர் ஆலயத்தில் பங்குகுரு ரொசாரியோ வினோத் குழந்தை இயேசுவின் சொரூபத்தை கைகளில் ஏந்தி பவனியாக எடுத்து வந்து அழகிய மாட்டுக்குடிலில் வைத்து பங்குமக்களுடன் இணைந்து ஆராதனை செய்து பின்னர் நள்ளிரவு திருப்பலியை நிறைவேற்றினார்.
பாதுகாப்புஇதே போல் வால்பாறை அருகே உள்ள சோலையார் நகர் புனித சூசையப்பர் ஆலயத்தில் ஆலய பங்குகுரு லாரன்ஸ் குழந்தை இயேசுவின் சொரூபத்தை மாட்டுக்குடிலில் வைத்து வணங்கி கிறிஸ்து பிறப்பு பாடல் திருப்பலியை நிறைவேற்றினார். அனைத்து சபை கிறிஸ்தவ ஆலயங்களிலும் கொட்டும் பனியையும் பொருட்படுத்தாமல் கிறிஸ்தவர்கள் கிறிஸ்து பிறப்பு திருப்பலிகள், பிரார்த்தனைகளில் கலந்து கொண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடினார்கள்.
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நேற்றுமுன்தினம் நள்ளிரவு நேரத்தில் கிறிஸ்தவர்கள் ஆலயங்களுக்கு சென்று விட்டு வீடுகளுக்கு சென்றதால் வால்பாறை, முடீஸ், காடம்பாறை, சேக்கல்முடி ஆகிய போலீஸ் நிலையங்களை சேர்ந்த போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
கலை நிகழ்ச்சிகள்அதே போல் காட்டுயானைகள் நடமாட்டம் இருந்ததால் வால்பாறை மற்றும் மானாம்பள்ளி வனச்சரகம் சார்பில் வனப்பணியாளர்கள் வேட்டை தடுப்பு காவலர்கள் யானைகள் நடமாட்டம் உள்ள அனைத்து எஸ்டேட் பகுதிகளிலும் சிறப்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும் பொள்ளாச்சியில் உள்ள சி.இ.எல்.சி. ஆலயத்தில் நேற்றுமுன்தினம் இரவு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. மேலும் ஆலயம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இதே போல் பொள்ளாச்சி நகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 20–க்கும் மேற்பட்ட கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதே போல் கிணத்துக்கடவு, நெகமம், சுல்தான்பேட்டை ஆகிய பகுதிகளில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி சிறப்பு பிரார்த்தனை, திருப்பலி நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.