பிளாஸ்டிக் பயன்படுத்தக் கூடாது, குப்பை கொட்டினால் அபராதம் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றியுள்ள பகுதிகளை தூய்மையாக பராமரிக்க மாநகராட்சி நடவடிக்கை 1–ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது


பிளாஸ்டிக் பயன்படுத்தக் கூடாது, குப்பை கொட்டினால் அபராதம் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றியுள்ள பகுதிகளை தூய்மையாக பராமரிக்க மாநகராட்சி நடவடிக்கை 1–ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது
x

மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றியுள்ள பகுதிகளை தூய்மையாக பராமரிக்கும் வகையில் அந்த பகுதிகளில் பிளாஸ்டிக் பயன்படுத்தக் கூடாது. குப்பை கொட்டினால் அபராதம் என பல்வேறு கட்டுப்பாடுகள் வருகிற 1–ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது. பிளாஸ்டிக் பைகள் மதுரை மாநகரை சுத்

மதுரை,

மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றியுள்ள பகுதிகளை தூய்மையாக பராமரிக்கும் வகையில் அந்த பகுதிகளில் பிளாஸ்டிக் பயன்படுத்தக் கூடாது. குப்பை கொட்டினால் அபராதம் என பல்வேறு கட்டுப்பாடுகள் வருகிற 1–ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

பிளாஸ்டிக் பைகள்

மதுரை மாநகரை சுத்தமாக பரமாரிக்க பல்வேறு நடவடிக்கைகளை மாநகராட்சி எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றி வருகிற 1–ந் தேதி முதல் சில கட்டுப்பாடுகளை மாநகராட்சி விதித்துள்ளது. அதன்படி மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றியுள்ள வெளிவீதி, மாசி வீதி, ஆவணி வீதிகள் மற்றும் மாரட் வீதிகளில் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தடை செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, இந்த பகுதிகளில் தடை செய்யப்பட்ட இந்த பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யவோ, கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கவோ கூடாது.

அபராதம்

மேலும் வெளியூர்களில் இருந்து மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் பிளாஸ்டிக் பைகள் கொண்டு வந்தால், அதனை அவர்களிடம் இருந்து வாங்கி குப்பை தொட்டியில் போட, ஆங்காங்கே குப்பை தொட்டியும் வைக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் ஒழிப்பு நடக்கும் அதேவேளையில், கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் குப்பைகளை கொட்டவும் மாநகராட்சி தடை விதித்துள்ளது. மீறி கொட்டினால் உடனடியாக அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை கண்காணித்து அபராதம் விதிக்க தூய்மை காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சாலையோர வியாபாரிகள்

மேலும், மீனாட்சி அம்மன் கோவில் பகுதியில் உள்ள ஒவ்வொரு கடைக்காரர்களும் தங்களது கடையில் சேரும் குப்பைகளை குப்பைத் தொட்டியில் போட வேண்டும். சாலைகளில் போடக் கூடாது.

மாநகராட்சியின் அடையாள அட்டை இருக்கும் சாலையோர வியாபாரிகள் மட்டுமே அங்கு வியாபாரம் செய்ய முடியும். மற்றவர்களுக்கு அனுமதி கிடையாது. ஒவ்வொரு சாலையோர வியாபாரிகள் தங்களது கடைமுன் சிறிய குப்பைத் தொட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு கடையிலும், பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்த மாட்டேன் என்ற வாசகங்கள் அடங்கிய வில்லைகளை(ஸ்டிக்கர்) வைக்க வேண்டும் என மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது.


Next Story