ஊத்துக்குளி அருகே காயமடைந்த பெலிக்கான் பறவை மீட்பு


ஊத்துக்குளி அருகே காயமடைந்த பெலிக்கான் பறவை மீட்பு
x
தினத்தந்தி 26 Dec 2016 3:30 AM IST (Updated: 26 Dec 2016 12:58 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி ஒன்றியம் இச்சிப்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட வரப்பாளையத்தில் உள்ள மாகாளியம்மன் கோவில் முன் நேற்றுகாலை கிரே பெலிக்கான் பறவை(சாம்பல் நிற கூழைக்கடா) ஒன்று இறகு பகுதியில் காயம்பட்டு பறக்க முடியாமல் கிடந்தது. இதைப்பார்த்த ஊராட்சி

திருப்பூர்

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி ஒன்றியம் இச்சிப்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட வரப்பாளையத்தில் உள்ள மாகாளியம்மன் கோவில் முன் நேற்றுகாலை கிரே பெலிக்கான் பறவை(சாம்பல் நிற கூழைக்கடா) ஒன்று இறகு பகுதியில் காயம்பட்டு பறக்க முடியாமல் கிடந்தது. இதைப்பார்த்த ஊராட்சி செயலாளர் பழனிச்சாமி மற்றும் அப்பகுதி பொதுமக்கள் அந்த பறவையை மீட்டு அதற்கு தண்ணீர் கொடுத்து பராமரித்தனர்.

பின்னர் இதுகுறித்து திருப்பூர் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். மாவட்ட வன அதிகாரி பெரியசாமி உத்தரவின் பேரில், வன அதிகாரி மகேஷ் மேற்பார்வையில் தோட்டக்காவலர் மகுடபதி சம்பவ இடத்துக்கு சென்றார். கிரே பெலிக்கானின் இறகு பகுதியில் ஏற்பட்ட காயத்துக்கு மருந்து போடப்பட்டது. பின்னர் மாலையில் அந்த பெலிக்கான் பறவையை சின்னியம்பாளையம் குளத்துப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர்.


Next Story