தற்போது இருப்பதோ வெறும் 24 அடி மொத்த கொள்ளளவு 143 அடி குட்டையாக மாறியது, பாபநாசம் அணை நெல்லை, தூத்துக்குடி உள்பட 5 மாவட்டங்களில் குடிநீருக்கு ஆபத்து
நெல்லை, மொத்த கொள்ளளவான 143 அடி கொண்ட பாபநாசம் அணையில் தற்போது வெறும் 24 அடி தண்ணீர் மட்டுமே உள்ளது. இதனால் கடல் போல் காட்சி அளிக்கும் அணை குட்டையாக மாறியது. நெல்லை, தூத்துக்குடி உள்பட 5 மாவட்டங்களில் குடிநீருக்கு ஆபத்து ஏற்பட்டு உள்ளது. தாமிரபரணி ஆறு
நெல்லை,
மொத்த கொள்ளளவான 143 அடி கொண்ட பாபநாசம் அணையில் தற்போது வெறும் 24 அடி தண்ணீர் மட்டுமே உள்ளது. இதனால் கடல் போல் காட்சி அளிக்கும் அணை குட்டையாக மாறியது. நெல்லை, தூத்துக்குடி உள்பட 5 மாவட்டங்களில் குடிநீருக்கு ஆபத்து ஏற்பட்டு உள்ளது.
தாமிரபரணி ஆறு
மேற்கு தொடர்ச்சி மலையில் பாபநாசம் காரையாறு அணைக்கு மேலே தென்பொதிகை மலையில் பூங்குளத்தில் உற்பத்தியாகும் தாமிரபரணி ஆறு காடு, மேடுகள் வழியாக பாய்ந்து நெல்லை மாவட்டத்தில் 80 கிலோ மீட்டர் தூரத்திற்கும், தூத்துக்குடி மாவட்டத்தில் 40 கிலோ மீட்டர் தூரத்திற்கும் ஆக மொத்தம் 120 கிலோ மீட்டர் தூரம் ஓடி விவசாய நிலங்களுக்கு பாசனம் வழங்கி விட்டு வங்க கடலில் கலக்கிறது.
பாபநாசம் நீர்த்தேக்கத்தில் மின்சாரம் தயாரிக்கப்பட்ட பின்னர் வினாடிக்கு 1,500 கன அடி தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் வெளியேற்றப்படுகிறது.
பாபநாசம் அணை
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள விவசாய நிலங்களில் பாய்ந்தோடி இந்த இரண்டு மாவட்டங்களையும் வளம் கொழிக்க செய்யும் தலையாய பணியை செய்து வருகிறது பாபநாசம் அணை. நெல்லை மாவட்டத்தில் உள்ள பாபநாசத்தில் அமைந்து உள்ள இந்த அணையின் மொத்த கொள்ளளவு 143 அடி.
இந்த அணைக்கு கீழ் உள்ள 8 அணைக்கட்டுகளில் 11 கால்வாய்கள் மூலம் பாசனத்திற்கு தண்ணீர் வழங்கப்படுகிறது. இந்த தண்ணீர் மூலம் நெல்லை மாவட்டத்தில் 40 ஆயிரத்து 300 ஏக்கர் நிலமும், தூத்துக்குடி மாவட்டத்தில் 46 ஆயிரத்து 107 ஏக்கர் நிலமும் பாசனம் பெறுகிறது. மேலும் நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், மதுரை ஆகிய 5 மாவட்டங்களை சேர்ந்த மக்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும் திகழ்கிறது.
பொய்த்துப்போன பருவமழை
நெல்லை மாவட்டத்திலும், அணையின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழையும், வடகிழக்கு பருவ மழையும் பொய்த்துப்போனதால் அணைக்கு தண்ணீர் வரக்கூடிய பேயாறு, உள்ளாறு, பாம்பாறு ஆகிய 3 ஆறுகளிலும் தண்ணீர் வராமல் வறண்டு விட்டது. அணைக்கு பாணதீர்த்த அருவி பகுதியில் இருந்து வருகின்ற தண்ணீர் மட்டும்தான் தற்போது கசிவு நீர் போல் வந்து கொண்டு இருக்கிறது.
இதனால் அணையின் நீர்மட்டம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. பாபநாசம் அணைக்கு தண்ணீர் வரக்கூடிய சிறிய ஆறுகள், சிறிய ஓடைகளிலும் தண்ணீர் வரத்து குறைந்து விட்டது. இதனால் 143 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையில் நேற்றைய நீர்மட்டம் வெறும் 23.90 அடியாக இருந்தது.
வறண்டுபோன குளங்கள்
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பலத்த மழை பெய்ததால் பாபநாசம் அணை நிரம்பி உபரிநீர் திறக்கப்பட்டது. கடந்த ஆண்டு இதே நாளில் இந்த அணையின் நீர்மட்டம் 142.20 அடியாக இருந்தது. ஆனால் இந்த ஆண்டு இரண்டு பருவமழையும் கைவிரித்து விட்டதால் மாவட்டம் முழுவதும் கடும் வறட்சியாக உள்ளது.
கடந்த ஆண்டு இந்த இரண்டு மாவட்டங்களிலும் உள்ள குளங்கள் உள்பட நீர் நிலைகள் அனைத்தும் நீர் நிரம்பியும், எங்கு பார்த்தாலும் விவசாயம் செழித்து பச்சை பசேல் என்றும் காட்சி அளித்தன. ஆனால் தற்போது எந்த குளத்திலும் தண்ணீர் இல்லை. அத்தனை குளங்களும் வறண்டு போய் உள்ளன. பச்சைப்பசேல் என்று காட்சி அளிக்கக்கூடிய வயல்வெளிகள் அனைத்தும் விவசாயமே செய்யப்படாததால் வெட்ட வெளிகளாக காட்சி அளிக்கின்றன.
5 மாவட்டங்களில் குடிநீருக்கு ஆபத்து
பாபநாசம் அணையில் தற்போது இருக்கும் 24 அடியில் 15 அடிக்கு சேறும், சகதியுமாகவே காணப்படும். இந்த 15 அடி தண்ணீரையும் குடிநீருக்கு உபயோகப்படுத்த முடியாது. எனவே தற்போதைய நிலவரப்படி 9 அடி தண்ணீரை மட்டுமே குடிநீருக்கு பயன்படுத்த முடியும். இதே நிலை தொடருமானால் நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், மதுரை ஆகிய 5 மாவட்டங்களிலும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்படும். பொதுமக்கள் மட்டுமல்லாது கால்நடைகளும் குடிநீருக்கு அல்லாடும் நிலை ஏற்படும்.
எனவே தற்போதைய சூழ்நிலையில் இயற்கையும், வருணபகவானும் மனது வைத்தால் மட்டுமே பொதுமக்கள், கால்நடைகளின் அத்தியாவசிய தேவையான குடிநீர் மற்றும் உணவு தேவையை பூர்த்தி செய்ய முடியும். இதற்காக நெல்லை மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் மழை வேண்டி சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த பூஜை மற்றும் வழிபாட்டை ஏற்று இறைவன் கருணை காட்டினால் மட்டுமே இதற்கு தீர்வு கிடைக்கும். வருண பகவான், கருணை காட்டுவார் என்று நம்புவோம். இதற்காக அவரை வேண்டுவோம். இதனைத்தவிர வேறு வழியே இல்லை.

Next Story