ஜெயங்கொண்டம், பாடாலூர், வி.கைகாட்டி பகுதியில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம்
ஜெயங்கொண்டம், பாடாலூர், வி.கைகாட்டி பகுதியில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. ஜெயங்கொண்டம் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் புனிதபாத்திமா அன்னை ஆலயத்தில் வட்டார முதன்மைகுரு கோஸ்மான்ஆரோக்கியராஜ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெ
ஜெயங்கொண்டம்
ஜெயங்கொண்டம், பாடாலூர், வி.கைகாட்டி பகுதியில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது.
ஜெயங்கொண்டம்
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் புனிதபாத்திமா அன்னை ஆலயத்தில் வட்டார முதன்மைகுரு கோஸ்மான்ஆரோக்கியராஜ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதே போல் பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஒன்றியப் பகுதிகளில் உள்ள பாடாலூர், செட்டிகுளம் பகுதிகளில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் நேற்று முன்தினம் இரவு கிறிஸ்துமஸ் சிறப்பு கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது.
பாடாலூரில் உள்ள பிரான்சிஸ் ஆலயத்தில் பாடாலூர் மறறும் சுற்றுப்புற கிராமஙகளைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு கூட்டு திருப்பலி நடத்தினர். அதேபோல் செட்டிகுளம் கிராமத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் செட்டிகுளம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் புத்தாடை அணிந்து ஒன்று கூடி சிறப்பு பிரார்த்தனை நடத்தினர். மேலும், ஒருவருககொருவர் கேக் மற்றும் இனிப்பு வழங்கி கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்.
வி.கைகாட்டி
அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி அருகே ரெட்டிப்பாளையம் கிறிஸ்தவ ஆலயத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டது.
இதில் போதகர் மார்ட்டின் தலைமையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் சிறப்பு பிரார்த்தனை மற்றும் திருப்பலி நடந்தது. தொடர்ந்து நேற்று காலை 8 மணி அளவில் கூட்டு திருப்பலியும், பல்வேறு மொழிகளில் சிறப்பு பிரார்த்தனையும் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் போதகர்கள் அமலநாதன், தேவஅருள், அற்புதராஜ் ஆகியோர் கலந்து கொண்டு அன்பும், சமாதானமும் பெற்று அனைவரும் வாழ பிரார்த்தனை செய்தனர். இதில் ரெட்டிப்பாளையம், தேளூர், விளாங்குடி, ஒரத்தூர், முனியங்குறிச்சி, பெரியநாகலூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.