கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு கரூரில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி


கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு கரூரில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி
x
தினத்தந்தி 26 Dec 2016 3:30 AM IST (Updated: 26 Dec 2016 1:36 AM IST)
t-max-icont-min-icon

கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு கரூரில் உள்ள தேவாலயங்களில் நடந்த சிறப்பு திருப்பலியில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். கிறிஸ்துமஸ் கிறிஸ்துமஸ் தினம் நேற்று கரூரில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதன்படி கரூர் புனித தெரசம்மாள் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் தினத்தை மு

கரூர்,

கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு கரூரில் உள்ள தேவாலயங்களில் நடந்த சிறப்பு திருப்பலியில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

கிறிஸ்துமஸ்

கிறிஸ்துமஸ் தினம் நேற்று கரூரில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதன்படி கரூர் புனித தெரசம்மாள் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு நள்ளிரவு அருட்தந்தை தபேயு தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் ஏராளமானவர்கள் புத்தாடை அணிந்து கலந்து கொண்டனர். தொடர்ந்து கிறிஸ்தவ பாடல்களை பாடி கிறிஸ்தவ மக்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். பின்னர் ஏசுவை சிறப்பிக்கும் வகையில் ஒருவருக்கொருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் தெரிவித்துக்கொண்டனர்.

சிறப்பு ஆராதனை

அதேபோன்று சி.எஸ்.ஐ. நகரில் உள்ள தேவாலயத்தில் அதிகாலை 4.30 மணி முதல் 6 மணி வரை சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

வேலாயும்பாளையம் முல்லை நகரில் உள்ள சுவிஷே திருச்சபை உலக ரட்சகர் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு அலங்கார மின் விளக்குகள், பலூன்கள், வண்ண தோரணங்கள் மூலம் அலங்கரிக்கப்பட்டது. மேலும் ஆலயத்தின் மேல் உச்சியில் ராட்சத நட்சத்திர மின் விளக்கு வைக்கப்பட்டது. அதிகாலை 4 மணி அளவில் சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டு, இதில் கலந்து கொண்டவர்களுக்கு அப்பம் வழங்கி ஆசீர்வாதம் செய்யப்பட்டது. பின்னர் வானவெடிகள் வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கிறிஸ்தவர்கள் கொண்டாடப்பட்டன.

இதேபோன்று கரூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிறிஸ்தவ தேவாயலம் மற்றும் சபைகளில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.


Next Story