புதுச்சேரியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்
புதுச்சேரி சுற்றுலா பயணிகளின் வருகையினால் களைகட்டியுள்ளது. சுற்றுலா பயணிகள் வாரவிடுமுறை நாட்களில் புதுவையில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும். தற்போது பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும் நேற்று கிறிஸ்துமஸ் கொண்டாடப்பட்டத
புதுச்சேரி,
புதுச்சேரி சுற்றுலா பயணிகளின் வருகையினால் களைகட்டியுள்ளது.
சுற்றுலா பயணிகள்வாரவிடுமுறை நாட்களில் புதுவையில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும். தற்போது பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளது.
மேலும் நேற்று கிறிஸ்துமஸ் கொண்டாடப்பட்டது. வருகிற ஞாயிற்றுக்கிழமை புத்தாண்டு பிறக்க உள்ளது. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பிறக்க உள்ள நிலையில் பள்ளிகள் விடுமுறை விடப்பட்டுள்ளதால் புதுவைக்கு நேற்று சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக காணப்பட்டது.
சுற்றுலா தலங்கள்புதுவை வந்த சுற்றுலா பயணிகளில் பெரும்பாலானவர்கள் புதுவையில் உள்ள தேவாலயங்களில் நடந்த சிறப்பு பிரார்த்தனைகளில் கலந்துகொண்டனர். நேற்று புதுவையில் உள்ள சுற்றுலாதலங்களான கடற்கரை, பாரதி பூங்கா, தாவரவியல் பூங்கா உள்ளிட்ட இடங்களில் எங்கு பார்த்தாலும் சுற்றுலா பயணிகள் குவிந்திருந்தனர்.
பெரும்பாலானவர்கள் புதுவையில் உள்ள ஓட்டல்களில் பல நாட்கள் அறைகளை முன்பதிவு செய்துள்ளனர். புத்தாண்டை இங்கேயே கொண்டாடிவிட்டு அதன்பின்னரே சொந்த ஊர்களுக்கு செல்ல தீர்மானித்துள்ளனர்.
படகு குழாம்தொடர் விடுமுறை மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களை தொடர்ந்து ஓட்டல்கள் அனைத்தும் நிரம்பியுள்ளன. நகரப்பகுதியில் எங்கு பார்த்தாலும் வெளிமாநில பதிவெண் கொண்ட கார்களாக பவனி வருகின்றன.
சுற்றுலா பயணிகளின் வருகையினால் முக்கிய சுற்றுலா தலமான நோணாங்குப்பம் சுண்ணாம்பாறு படகு குழாமில் கூட்டம் அலைமோதியது. அவர்கள் படகு மூலம் பேரடைஸ் கடற்கரைக்கு செல்ல நீண்ட வரிசையில் காத்திருந்து டிக்கெட் எடுத்தனர். வரிசையில் நின்ற அவர்களுக்கு போதுமான வசதிகள் செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. கடும் வெயிலில் அவர்கள் கால்கடுக்க வரிசையில் நிற்க வேண்டிய நிலை இருந்தது.
எதிர்பார்ப்புஇதுபோன்ற முக்கிய விழா நாட்களிலும், தொடர்ச்சியாக வரும் விடுமுறை நாட்களிலும் சுண்ணாம்பாறு படகு குழாமுக்கு வழக்கத்தைவிட சுற்றுலா பயணிகள் வருகை பலமடங்கு அதிகரிப்பதால், அதனை எதிர்பார்த்து புதுச்சேரி அரசு சுற்றுலா துறை பயணிகளுக்கு தேயை£ன அனைத்து அடிப்படை வசதிகளையும் முறையாக செய்ய வேண்டும் சுற்றுலா பயணிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.