அரியாங்குப்பம் புனித ஆரோக்கிய அன்னை ஆலய கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனையில் கவர்னர் பங்கேற்பு


அரியாங்குப்பம் புனித ஆரோக்கிய அன்னை ஆலய கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனையில் கவர்னர் பங்கேற்பு
x
தினத்தந்தி 26 Dec 2016 4:30 AM IST (Updated: 26 Dec 2016 2:39 AM IST)
t-max-icont-min-icon

கிறிஸ்துமஸ் விழாவையொட்டி அரியாங்குப்பத்தில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சியில் கவர்னர் கிரண்பெடி கலந்துகொண்டார். அப்போது அவர் ஆலய வளாகத்தில் இருந்த கிறிஸ்தவர்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவித்த

அரியாங்குப்பம்

கிறிஸ்துமஸ் விழாவையொட்டி அரியாங்குப்பத்தில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சியில் கவர்னர் கிரண்பெடி கலந்துகொண்டார். அப்போது அவர் ஆலய வளாகத்தில் இருந்த கிறிஸ்தவர்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார்.

கிறிஸ்துமஸ் விழா

உலகமெங்கும் கிறிஸ்துமஸ் விழா நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. புதுச்சேரியை அடுத்த அரியாங்குப்பம் புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சி நேற்று முன்தினம் இரவு தொடங்கி நேற்று அதிகாலை வரை நடைபெற்றது. இந்த சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சியில் இரவு சரியாக 12 மணிக்கு ஆலய வளாகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த குடிலில், ஆலய பங்குத் தந்தை தாமஸ் அடிகளார் குழந்தை ஏசு உருவத்தை வைத்தார். அதைத் தொடர்ந்து சிறப்பு ஆராதனை, பிரார்த்தனை நடைபெற்றது.

இதில் அரியாங்குப்பம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான கிறிஸ்தவர்கள் இந்த சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

கவர்னர் பங்கேற்பு

இந்த நிலையில் நேற்றுக் காலை 7 மணிக்கு நடைபெற்ற கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சியில் புதுச்சேரி மாநில கவர்னர் கிரண்பெடி கலந்து கொண்டார். அப்போது ஆலயத்தில் கூடியிருந்தவர்களுக்கு அவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். சுமார் 30 நிமிடம் கவர்னர் அங்கிருந்தார். பின்னர் ஆலயத்தில் இருந்து புறப்பட்டு சென்றார்.


Next Story