வார்தா புயலால் பாதிப்பு நிவாரணம் வழங்கக்கோரி விவசாயிகள் கோரிக்கை மனு
வார்தா புயல் கரையை கடந்த போது ஊத்துக்கோட்டை தாலுகாவில் உள்ள ஊத்துக்கோட்டை, அனந்தேரி, போந்தவாக்கம், தாராட்சி, நெய்வேலி, அத்தங்கிகாவனூர், பூரிவாக்கம். புன்னபாக்கம், வடமதுரை ஊராட்சிகளில் சுமார் 20 ஆயிரம் ஏக்கர் நிலபரப்பில் சாகுபடி செய்த நெற்பயிர் சேதம் அட
ஊத்துக்கோட்டை
வார்தா புயல் கரையை கடந்த போது ஊத்துக்கோட்டை தாலுகாவில் உள்ள ஊத்துக்கோட்டை, அனந்தேரி, போந்தவாக்கம், தாராட்சி, நெய்வேலி, அத்தங்கிகாவனூர், பூரிவாக்கம். புன்னபாக்கம், வடமதுரை ஊராட்சிகளில் சுமார் 20 ஆயிரம் ஏக்கர் நிலபரப்பில் சாகுபடி செய்த நெற்பயிர் சேதம் அடைந்தது. அறுவடைக்கு 20 நாட்களே உள்ள நிலையில் நெற்பயிருக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ. 30 ஆயிரம் நிவாரணத்தொகை வழங்க வேண்டும். மேலும் சேதம் அடைந்த வாழை, தேக்கு, மா மரங்களை அதிகாரிகள் கணக்கிட்டு ஏக்கருக்கு ரூ. 50 ஆயிரம் நிவாரணத்தொகையாக வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாய சங்க நிர்வாகிகள் முருகேசன், ரவி, கண்ணன், மாரிமுத்து, பாலாஜி, மற்றும் ஏராளமான விவசாயிகள் ஊத்துக்கோட்டையில் உள்ள வேளாண் துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.
Next Story