மேல்மருவத்தூர் அருகே 3 குழந்தைகளுடன் தாய் தற்கொலை


மேல்மருவத்தூர் அருகே 3 குழந்தைகளுடன் தாய் தற்கொலை
x
தினத்தந்தி 26 Dec 2016 3:15 AM IST (Updated: 26 Dec 2016 2:52 AM IST)
t-max-icont-min-icon

மேல்மருவத்தூர் அருகே குடும்பத்தகராறு காரணமாக 3 குழந்தைகளுடன் தாய் தற்கொலை செய்துக்கொண்டார். இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். தகராறு காஞ்சீபுரம் மாவட்டம் மேல்மருவத்தூரை அடுத்த அகிலியை சேர்ந்தவர் தாமோதரன் (வயது 35). பிளம்பர். வேலையின் காரணமா

மதுராந்தகம்,

மேல்மருவத்தூர் அருகே குடும்பத்தகராறு காரணமாக 3 குழந்தைகளுடன் தாய் தற்கொலை செய்துக்கொண்டார். இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தகராறு

காஞ்சீபுரம் மாவட்டம் மேல்மருவத்தூரை அடுத்த அகிலியை சேர்ந்தவர் தாமோதரன் (வயது 35). பிளம்பர். வேலையின் காரணமாக மேல்மருவத்தூரை அடுத்த சோத்துப்பாக்கம் எம்.ஜி.ஆர் நகரில் வாடகை வீட்டில் தனது மனைவி மங்கலட்சுமி (30), மகள்கள் சுஜிதா (3), தாட்சாயணி (2), தாரணி (2) ஆகியோருடன் வசித்து வந்தார்.

தாமோதரன் மது அருந்தும் பழக்கம் உடையவர். அடிக்கடி மது அருந்தி விட்டு வீட்டுக்கு வரும் அவர் மனைவியுடன் தகராறில் ஈடுபடுவார் என்று கூறப்படுகிறது. கணவர் மது அருந்தி விட்டு வந்து தகராறில் ஈடுபடுகிறாரே என்ற மனவருத்தத்தில் மங்கலட்சுமி இருந்தார்.

தற்கொலை

இந்த நிலையில் தாமோதரனின் வீட்டின் அருகில் உள்ள தனியார் ஒருவரது விவசாய கிணற்றில் நேற்று காலை குழந்தைகள் மற்றும் பெண்ணின் பிணம் மிதப்பதை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து அவர்கள் மேல்மருவத்தூர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கிணற்றில் பிணமாக மிதந்த குழந்தைகள் மற்றும் பெண்ணின் பிணத்தை மீட்டனர்.

விசாரணையில் அந்த பெண் மங்கலட்சுமி மற்றும் அவரது 3 குழந்தைகள் என்பது தெரியவந்தது. குடும்பத்தகராறு காரணமாக மங்கலட்சுமி தன்னுடைய 3 குழந்தைகளை கிணற்றில் தூக்கிப்போட்டு விட்டு தானும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

கணவரிடம் விசாரணை

போலீசார் 4 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் மங்கலட்சுமியின் கணவர் தாமோதரனை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

3 குழந்தைகளுடன் தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோத்துப்பாக்கம் சுற்று வட்டார பகுதிகளில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story