காஞ்சீபுரம் அருகே மின்சார ரெயிலில் அனாதையாக கிடந்த பெண் குழந்தை போலீசார் விசாரணை
காஞ்சீபுரம் அருகே மின்சார ரெயிலில் அனாதையாக பெண் குழந்தை கிடந்தது. இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். பெண் குழந்தை சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தில் இருந்து திருமால்பூருக்கு சென்ற மின்சார ரெயில் நேற்று முன்தினம் இரவு 10½ மணிக்கு காஞ்சீபு
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரம் அருகே மின்சார ரெயிலில் அனாதையாக பெண் குழந்தை கிடந்தது. இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பெண் குழந்தைசென்னை கடற்கரை ரெயில் நிலையத்தில் இருந்து திருமால்பூருக்கு சென்ற மின்சார ரெயில் நேற்று முன்தினம் இரவு 10½ மணிக்கு காஞ்சீபுரம் சென்றடைந்தது. பெரும்பாலான பயணிகள் காஞ்சீபுரத்திலேயே இறங்கி விடுவர். ஒருசிலர் மட்டுமே திருமால்பூர் செல்வர்.
இந்த நிலையில் ரெயில் காஞ்சீபுரத்தை அடுத்த திருமால்பூரை அடைந்ததும் ரெயில் பெட்டியில் பிறந்து 3 நாட்களே ஆன பெண் குழந்தை ஒன்று அனாதையாக கிடந்தது. இதை பார்த்து பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே அந்த ரெயிலில் இருந்த சிலர் இது குறித்து ரெயில்வே போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் விசாரணைரெயில்வே பாதுகாப்பு போலீசார் மோகன்தாஸ், விமல்குமார்ராய் ஆகியோர் அங்கு விரைந்து வந்தனர். அந்த குழந்தைக்கு யாரும் சொந்தம் கொண்டாடவில்லை. இதனால் அந்த குழந்தையை அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பிறந்து 3 நாட்களே ஆன அந்த பெண் குழந்தையை விட்டு சென்றது யார்? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.