தக்கோலத்தில் குடிசை வீட்டில் திடீர் தீ விபத்து தாய், 2 குழந்தைகள் உயிருடன் மீட்பு


தக்கோலத்தில் குடிசை வீட்டில் திடீர் தீ விபத்து தாய், 2 குழந்தைகள் உயிருடன் மீட்பு
x
தினத்தந்தி 27 Dec 2016 4:15 AM IST (Updated: 26 Dec 2016 6:25 PM IST)
t-max-icont-min-icon

தக்கோலத்தில் குடிசை வீட்டில் திடீரெனத் தீ விபத்து ஏற்பட்டது. கதவு வெளிப்புறமாக பூட்டப்பட்டு இருந்ததால் தாய், 2 குழந்தைகள் வெளியேற முடியாமல் தவித்தனர். பக்கத்து வீட்டுக்காரர் ஓடி வந்து 3 பேரையும் உயிருடன் மீட்டார். தீ விபத்து அரக்கோணம் அருகே தக்கோலம் கல

அரக்கோணம்,

தக்கோலத்தில் குடிசை வீட்டில் திடீரெனத் தீ விபத்து ஏற்பட்டது. கதவு வெளிப்புறமாக பூட்டப்பட்டு இருந்ததால் தாய், 2 குழந்தைகள் வெளியேற முடியாமல் தவித்தனர். பக்கத்து வீட்டுக்காரர் ஓடி வந்து 3 பேரையும் உயிருடன் மீட்டார்.

தீ விபத்து

அரக்கோணம் அருகே தக்கோலம் கலியாத்தம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சங்கர் (வயது 35), விவசாயி. இவருடைய மனைவி லட்சுமி (30). அவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். குடிசை வீட்டில் வசித்து வரும் சங்கர், நேற்று முன்தினம் அதிகாலை நேரத்தில் எழுந்து வெளியே சென்று விட்டார். வீட்டில் லட்சுமி, இரு குழந்தைகள் தூங்கி கொண்டு இருந்தனர்.

குடிசை வீடு திடீரெனத் தீப்பிடித்து எரிந்தது. திடுக்கிட்டு எழுந்த லட்சுமி தனது இரு குழந்தைகளை எழுப்பி வீட்டில் இருந்து வெளியேற முயன்றார். அப்போது வீட்டின் கதவு வெளி பக்கமாக தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்தது. அதிர்ச்சி அடைந்த லட்சுமியும், குழந்தைகளும் அலறினர். அவர்களின் அலறல் சத்தத்தைக் கேட்டு, பக்கத்து வீட்டில் வசிக்கும் கோபி என்பவர் ஓடி வந்து கதவின் தாழ்ப்பாளை திறந்து லட்சுமி, இரு குழந்தைகளை உயிருடன் காப்பாற்றினார். இந்தத் தீ விபத்தில் குடிசை முற்றிலும் எரிந்து சாம்பலாகி விட்டது.

உதவித்தொகை

இதுகுறித்து தகவல் அறிந்த தக்கோலம் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி வழக்குப்பதிவு செய்து, தீ விபத்து மின் கசிவால் ஏற்பட்டதா, யாரேனும் குடிசைக்குத் தீ வைத்தார்களா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார். அரக்கோணம் தொகுதி எம்.எல்.ஏ. சு.ரவி சம்பவ இடத்துக்குச் சென்று தீ விபத்தில் பாதிக்கப்பட்ட சங்கர் குடும்பத்தினருக்கு, தனது சொந்த பணத்தில் இருந்து ரூ.2 ஆயிரத்தை வழங்கினார்.

இந்தத் தீ விபத்து குறித்துத் தகவல் அறிந்த தாசில்தார் குமரவேல், வருவாய் ஆய்வாளர் அருள்செல்வம், கிராம நிர்வாக அலுவலர் வேலு மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று, பாதிக்கப்பட்ட சங்கர் குடும்பத்துக்கு 10 கிலோ அரிசி, 1 லிட்டர் மண்எண்ணெய், வேட்டி–சேலை ஆகியவற்றை நேரில் வழங்கினர். சங்கரின் வங்கி கணக்கில் உதவித்தொகையாக ரூ.4 ஆயிரத்து 100–யை செலுத்தினர்.


Next Story