காரைக்குடி பல்கலைக்கழகத்தை உலகத்தரம்வாய்ந்த பல்கலைக்கழகமாக உருவாக்க நடவடிக்கை எடுப்பேன் துணைவேந்தர் சுப்பையா பேச்சு
காரைக்குடி பல்கலைக்கழகத்தை உலகத்தரம்வாய்ந்த பல்கலைக்கழகமாக உருவாக்க நடவடிக்கை எடுப்பேன் என்று துணைவேந்தர் கூறினார். முன்னாள் மாணவர்கள் சங்க கூட்டம் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் கல்வியியல் கல்லூரியின் கல்வியியல் துறை, வாழ்
காரைக்குடி,
காரைக்குடி பல்கலைக்கழகத்தை உலகத்தரம்வாய்ந்த பல்கலைக்கழகமாக உருவாக்க நடவடிக்கை எடுப்பேன் என்று துணைவேந்தர் கூறினார்.
முன்னாள் மாணவர்கள் சங்க கூட்டம்காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் கல்வியியல் கல்லூரியின் கல்வியியல் துறை, வாழ்நாள் கற்றலியல்துறை, சிறப்புக்கல்வியியல் மற்றும் புனர்வாழ்வு அறிவியல் ஆகிய துறைகளில் 1950–ம் ஆண்டு முதல் 2016–ம் ஆண்டு வரையில் படித்த முன்னாள் மாணவர்கள் சங்க கூட்டம் பல்கலைக்கழக துணைவேந்தர் சுப்பையா தலைமையில் நடைபெற்றது. பேராசிரியர் அருணாச்சலம் வரவேற்றார்.
விழாவில் துணைவேந்தர் சுப்பையா பேசியதாவது:–
உலகத்தரம் வாய்ந்த பல்கலைக்கழகமாக மாற்றுவதில் முன்னாள் மாணவர்களின் பங்களிப்பு இன்றியமையாததாகும். ஒவ்வொரு ஆண்டும் முன்னாள் மாணவர்கள் தாங்கள் படித்த கல்வி நிலையத்திற்கு தங்களது குடும்பத்துடன் வந்து கல்வி நிலையங்களின் வளர்ச்சியை தெரிந்து கொண்டு தங்களின் பங்களிப்பை அளிக்க வேண்டும்.
உலகத்தரம் வாய்ந்த பல்கலைக்கழகம்மேலை நாட்டுப் பல்கலைக்கழகங்களில் முன்னாள் மாணவர்களின் பெயர், படித்த வருடம் ஆகியவற்றை பதிவு செய்து வைத்துள்ளனர். அழகப்பா பல்கலைக்கழகத்திலும் இதுபோன்ற நடைமுறைகளை பின்பற்றி உலகத்தரம் வாய்ந்த பல்கலைக்கழகமாக உருவாக்க நடவடிக்கை எடுப்பேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து கல்வியியல் துறையின் மூத்த பேராசிரியர் மோகன், பல்கலைக்கழக பதிவாளர் பாலச்சந்திரன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். விழாவில் 621 முன்னாள் மாணவர்கள் தங்களது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின்போது வள்ளல் அழகப்பரின் ஆவணப்படம் திரையிடப்பட்டது.
அதன்பின்னர் முன்னாள் மாணவர்கள் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர். முடிவில், கல்வியியல் துறைத்தலைவர் கலையரசன் நன்றி கூறினார். விழாவுக்கான ஏற்பாடுகளை கல்வியியல் கல்லூரியின் முதன்மை பேராசிரியர் சிவக்குமார் மற்றும் அனைத்துத்துறை பேராசிரியர்கள் செய்திருந்தனர்.