10–ம் வகுப்பு மாணவன் கொலை செய்யப்பட்ட சம்பவம்: சாலைமறியலில் ஈடுபட்ட 41 பேர் மீது வழக்கு
பண்ருட்டி அருகே உள்ள முத்தாண்டிக்குப்பம் புதுகாலனியை சேர்ந்தவர் ஜெயசங்கர். இவரது மகன் ஜெயபிரகாஷ். இவன் நெய்வேலியில் உள்ள பள்ளியில் 10–ம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில் கடந்த 23–ந்தேதி அதேபகுதியில் மளிகைகடை நடத்தி வரும் பழனியப்பன் என்பவர் கத்தியால் க
பண்ருட்டி,
பண்ருட்டி அருகே உள்ள முத்தாண்டிக்குப்பம் புதுகாலனியை சேர்ந்தவர் ஜெயசங்கர். இவரது மகன் ஜெயபிரகாஷ். இவன் நெய்வேலியில் உள்ள பள்ளியில் 10–ம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில் கடந்த 23–ந்தேதி அதேபகுதியில் மளிகைகடை நடத்தி வரும் பழனியப்பன் என்பவர் கத்தியால் குத்தி கொலை செய்தார்.
இந்த நிலையில் ஜெயபிரகாசை கொலை சம்பவத்தில் தொடர்புடையவர்களை கைது செய்ய கோரி ஜெயசங்கர் மற்றும் அவரது உறவினர்கள் முத்தாண்டிக்குப்பம் பஸ்நிறுத்தம் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் தற்போது மறியலில் ஈடுபட்டு போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாக கூறி கொலை செய்யப்பட்ட மாணவனின் தந்தை ஜெயசங்கர் உள்பட 41 பேர் மீது முத்தாண்டிக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story