விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவில் உண்டியல் திறப்பு ரூ.7½ லட்சம் காணிக்கை வசூலானது


விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவில் உண்டியல் திறப்பு ரூ.7½ லட்சம் காணிக்கை வசூலானது
x
தினத்தந்தி 26 Dec 2016 10:46 PM IST (Updated: 26 Dec 2016 10:46 PM IST)
t-max-icont-min-icon

விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லூரில் கொளஞ்சியப்பர் கோவில் உள்ளது. இந்த கோவில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. இங்குள்ள 8 உண்டியல்கள் இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் ஜோதி முன்னிலையில் நேற்று திறக்கப்பட்டது. தொடர்ந்து காணிக்கை

விருத்தாசலம்,

விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லூரில் கொளஞ்சியப்பர் கோவில் உள்ளது. இந்த கோவில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. இங்குள்ள 8 உண்டியல்கள் இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் ஜோதி முன்னிலையில் நேற்று திறக்கப்பட்டது.

தொடர்ந்து காணிக்கை பணம் எண்ணும் பணி நடந்தது. இதில் மொத்தம் 7 லட்சத்து 43 ஆயிரத்து 79 ரூபாய் பணமும், 38½ கிராம் தங்கம், 241 கிராம் வெள்ளி, 5 ஆயிரம் மதிப்பிலான மலேசியா மற்றும் வெளிநாட்டு ரூபாய் நோட்டுகள், அன்னதான திட்டத்திற்கு ரூ. 31 ஆயிரத்திற்கான காசோலையும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.

இப்பணியின் போது ஆய்வாளர் சுபத்ரா, செயல்அலுவலர் கருணாகரன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.


Next Story