பாப்பிரெட்டிப்பட்டி அருகே விபத்து மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதல்; 2 பேர் பரிதாப சாவு 2 பேர் படுகாயம்
பாப்பிரெட்டிப்பட்டி அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர். நேருக்கு நேர் மோதல் சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணத்தை சேர்ந்தவர் மணி (வயது 30). இவருடைய நண்பர்கள் மோட்
அரூர்,
பாப்பிரெட்டிப்பட்டி அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
நேருக்கு நேர் மோதல்சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணத்தை சேர்ந்தவர் மணி (வயது 30). இவருடைய நண்பர்கள் மோட்டுப்பட்டியை சேர்ந்த முருகன்(30), சரத்குமார்(33). தொழிலாளர்களான இவர்கள் 3 பேரும் நேற்று முன்தினம் ஒரே மோட்டார் சைக்கிளில் தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டிக்கு சென்றனர். அப்போது எதிரே கோம்பூரை சேர்ந்த பெருமாள் (33), ராஜாராம் (39) ஆகியோர் மோட்டார் சைக்கிளில் வந்துள்ளனர்.
கோம்பூர் அருகே சென்ற போது 2 மோட்டார் சைக்கிள்களும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் பெருமாள், மணி ஆகியோர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். முருகன், ராஜாராம் ஆகிய 2 பேரும் படுகாயம் அடைந்தனர். சரத்குமார் காயமின்றி உயிர் தப்பினார். படுகாயம் அடைந்த 2 பேரையும் அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் விசாரணைபின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து அந்த வழியாக சென்றவர்கள் பாப்பிரெட்டிப்பட்டி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் இறந்த 2 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.