பள்ளிக்கு நிரந்தர தமிழ் ஆசிரியரை நியமிக்க வேண்டும் மாணவ, மாணவிகள் கலெக்டர் அலுவலகத்தில் மனு
சமத்துவபுரத்தில் உள்ள பள்ளிக்கு நிரந்தர தமிழ் ஆசிரியரை நியமிக்க வேண்டும் என மாணவ, மாணவிகள் கலெக்டர் கதிரவனிடம் மனு கொடுத்தனர். தமிழ் ஆசிரியர் கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதில் பல்வேறு ப
கிருஷ்ணகிரி,
சமத்துவபுரத்தில் உள்ள பள்ளிக்கு நிரந்தர தமிழ் ஆசிரியரை நியமிக்க வேண்டும் என மாணவ, மாணவிகள் கலெக்டர் கதிரவனிடம் மனு கொடுத்தனர்.
தமிழ் ஆசிரியர்கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் வந்து கலெக்டர் கதிரவனிடம் மனு கொடுத்தனர். ஓசூர் அருகே உள்ள நல்லூர் ஊராட்சிக்குட்பட்ட சமத்துவபுரத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மாயாண்டி தலைமையில் பெற்றோர் மற்றும் மாணவ, மாணவிகள் நேற்று கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொண்டு கலெக்டர் கதிரவனிடம் மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:–
எங்கள் பள்ளியில் சமத்துவபுரம், நல்லூர் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். எங்கள் பள்ளிக்கு நிரந்தர தமிழ் ஆசிரியர் இல்லை. எனவே நிரந்தரமாக தமிழ் ஆசிரியர் ஒருவரை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.