கிட்னி பாதிப்புக்குள்ளான மாணவிக்கு மருத்துவ உதவி கேட்டு தாய் கலெக்டரிடம் மனு


கிட்னி பாதிப்புக்குள்ளான மாணவிக்கு மருத்துவ உதவி கேட்டு தாய் கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 27 Dec 2016 4:00 AM IST (Updated: 26 Dec 2016 11:01 PM IST)
t-max-icont-min-icon

கிட்னி பாதிப்புக்குள்ளான மாணவிக்கு மருத்துவ உதவி கேட்டு அவரது தாய், கலெக்டரிடம் மனு கொடுத்தார். கலெக்டரிடம் மனு கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா கோட்டை உளிமங்கலத்தைச் சேர்ந்தவர் கீதா. இவரது மகள் ஹர்ஷிதா (வயது 14). நேற்று கீதா தனது மகளுடன் க

கிருஷ்ணகிரி,

கிட்னி பாதிப்புக்குள்ளான மாணவிக்கு மருத்துவ உதவி கேட்டு அவரது தாய், கலெக்டரிடம் மனு கொடுத்தார்.

கலெக்டரிடம் மனு

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா கோட்டை உளிமங்கலத்தைச் சேர்ந்தவர் கீதா. இவரது மகள் ஹர்ஷிதா (வயது 14). நேற்று கீதா தனது மகளுடன் கலெக்டர் அலுவலகம் வந்தார். அவர் கலெக்டர் கதிரவனை சந்தித்து கொடுத்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:–

எனது கணவர் இறந்து விட்டார். நான் கூலி வேலை செய்து மகளை கவனித்து வருகிறேன். எனது மகள் அரசு பள்ளியில் 8–ம் வகுப்பு படிக்கிறாள். கிட்னி பாதிப்புக்குள்ளான அவள், சிகிச்சையின் போது ஒவ்வாமை (அலர்ஜி) காரணமாக அவதிப்படுகிறாள். அவளுக்கு ஓசூரில் உள்ள அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

உதவ வேண்டும்

மேலும் சேலம் அரசு ஆஸ்பத்திரியிலும் சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போதெல்லாம் ஒவ்வாமை காரணமாக தோலில் மாற்றம் ஏற்பட்டது. இதனால் எனது மகள் எந்த பணிகளையும் செய்ய முடியாமல் அவதிப்படுகிறாள். நன்றாக படிக்க கூடிய எனது மகளின் படிப்பும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே எனது மகளுக்கு உரிய மருத்துவ சிகிச்சைக்கு உதவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.


Next Story