விழுப்புரத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து நிவாரணம் வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தை விவசாயிகள் சங்கத்தினர் முற்றுகை போராட்டம் 87 பேர் கைது
விழுப்புரத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து நிவாரணம் வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய விவசாயிகள் சங்கத்தினர் 87 பேர் கைது செய்யப்பட்டனர். முற்றுகை போராட்டம் விழுப்புரம் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து உரிய நிவாரணம் வழ
விழுப்புரம்,
விழுப்புரத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து நிவாரணம் வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய விவசாயிகள் சங்கத்தினர் 87 பேர் கைது செய்யப்பட்டனர்.
முற்றுகை போராட்டம்விழுப்புரம் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும், தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் வழங்க வேண்டும், பயிர் பாதிப்பு அடைந்துள்ள விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும், நிலுவையில் உள்ள பயிர் கடன் அனைத்தையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் தமிழ்மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தினர் முற்றுகை போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர்.
இந்த போராட்டத்திற்கு போலீஸ் அனுமதி மறுக்கப்பட்டது. இருப்பினும் ஏற்கனவே அறிவித்தபடி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர், தமிழ்மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தினர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று காலை ஒன்று திரண்டனர். பின்னர் அவர்கள் அனைவரும் கலெக்டர் அலுவலக நுழைவுவாயிலை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
87 பேர் கைதுபோராட்டத்திற்கு விவசாய சங்க வட்ட செயலாளர் கலியமூர்த்தி, விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட அமைப்பு செயலாளர் அப்பாவு ஆகியோர் தலைமை தாங்கினார்கள். இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சரவணன் கண்டன உரையாற்றினார். இதில் நிர்வாகிகள் கோவிந்தராஜ், சவுரிராஜன், ராமசாமி, இன்பஒளி, ராமமூர்த்தி, ராமச்சந்திரன் உள்பட பலர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். உடனே துணை போலீஸ் சூப்பிரண்டுகள் சுருளிராஜா, வெள்ளைச்சாமி, நாராயணசாமி, இன்ஸ்பெக்டர்கள் செந்தில்விநாயகம், அண்ணாத்துரை, மகேஷ் ஆகியோர் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட 13 பெண்கள் உள்பட 87 பேரை கைது செய்து போலீஸ் வேனில் ஏற்றிச்சென்று விழுப்புரத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.