ஆவின் பால் கலப்பட வழக்கில் வைத்தியநாதன் உள்பட 24 பேர் ஆஜர் விசாரணை ஜனவரி 23–ந் தேதிக்கு ஒத்திவைப்பு
ஆவின் பால் கலப்பட வழக்கில் வைத்தியநாதன் உள்பட 24 பேர் ஆஜராகினார்கள். வழக்கை விசாரித்த நீதிபதி சுபாஅன்புமணி, இதன் விசாரணையை அடுத்த மாதம் (ஜனவரி) 23–ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். ஆவின் பாலில் கலப்படம் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்த ஊரல
விழுப்புரம்,
ஆவின் பால் கலப்பட வழக்கில் வைத்தியநாதன் உள்பட 24 பேர் ஆஜராகினார்கள். வழக்கை விசாரித்த நீதிபதி சுபாஅன்புமணி, இதன் விசாரணையை அடுத்த மாதம் (ஜனவரி) 23–ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
ஆவின் பாலில் கலப்படம்விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்த ஊரல் கிராமத்தில் கடந்த 2014–ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 19–ந் தேதி ஆவின் பாலில் தண்ணீரை ஊற்றி கலப்படம் செய்ததாக திருவண்ணாமலை மாவட்டம் நாயுடுமங்கலத்தை சேர்ந்த சுரேஷ், ரமேஷ், சத்தியராஜ், மற்றொரு சுரேஷ், ராணிப்பேட்டையை சேர்ந்த அன்பு, முருகன், குணா, ஏழுமலை ஆகிய 8 பேரை வெள்ளிமேடுபேட்டை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினார்கள்.
இந்த சம்பவத்தில் பலர் ஈடுபட்டிருப்பது தெரியவந்ததால் இந்த வழக்கு விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இதனை தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடத்திய விசாரணையில் பாலை ஏற்றிவர வாகன ஒப்பந்தம் பெற்றிருந்த சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த அரசியல் பிரமுகர் வைத்தியநாதன், லாரி டிரைவர்கள் சென்னியப்பன், தண்டபாணி, சலீம், துரை உள்பட 11 பேரை போலீசார் கைது செய்து விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
மேலும் இந்த வழக்கின் குற்றப்பத்திரிகையை கடந்த 2014–ம் ஆண்டு செப்டம்பர் மாத இறுதியில் கோர்ட்டில் போலீசார் தாக்கல் செய்தனர். அதில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட வைத்தியநாதன் உள்பட 19 பேர் மற்றும் வைத்தியநாதன் மனைவி ரேவதி, சென்னை ஆவின் நிலையத்தின் பால் தரக்கட்டுப்பாட்டு மேலாளர் அப்துல்ரஹீம் உள்பட 7 பேரின் பெயரையும் இந்த வழக்கில் சேர்த்து கடந்த பிப்ரவரி மாதம் 19–ந் தேதி கூடுதலாக போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
விசாரணை ஒத்திவைப்புஇதனை தொடர்ந்து, இந்த வழக்கின் விசாரணை கடந்த ஏப்ரல் 20–ந் தேதி விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் தொடங்கியது. இந்த நிலையில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது வைத்தியநாதன், அவரது மனைவி ரேவதி உள்பட 24 பேர் ஆஜராகினார்கள். தினகரன், குமார் ஆகிய 2 பேர் மட்டும் ஆஜராகவில்லை. இவர்கள் 2 பேரும் ஆஜர் ஆகாததற்கான காரணம் குறித்து அவர்களது வக்கீல்கள் மனுதாக்கல் செய்தனர்.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி சுபாஅன்புமணி, இந்த வழக்கின் விசாரணையை அடுத்த மாதம் (ஜனவரி) 23–ந் தேதிக்கு ஒத்திவைத்ததோடு அன்றைய தினம் 26 பேரும் கோர்ட்டில் நேரில் ஆஜராகி குற்றப்பத்திரிகை நகலை பெற வேண்டும் என உத்தரவிட்டார்.