தலைவாசல் அருகே 3½ வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; காய்கறி வியாபாரி கைது
தலைவாசல் அருகே 3½ வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக காய்கறி வியாபாரி கைது செய்யப்பட்டார். பாலியல் தொல்லை தலைவாசல் அருகே உள்ள சிறுவாச்சூர் மூப்பனார் கோவில் பகுதியை சேர்ந்தவர் ஏகாதசி(வயது67). காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இதே பகுதியை சேர்ந
தலைவாசல்,
தலைவாசல் அருகே 3½ வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக காய்கறி வியாபாரி கைது செய்யப்பட்டார்.
பாலியல் தொல்லைதலைவாசல் அருகே உள்ள சிறுவாச்சூர் மூப்பனார் கோவில் பகுதியை சேர்ந்தவர் ஏகாதசி(வயது67). காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இதே பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளிக்கு 3½ வயதில் மகள் இருக்கிறாள்.
நேற்று காலை கூலித்தொழிலாளியும், அவரது மனைவியும் வெளியில் சென்று இருந்தனர். அப்போது சிறுமியிடம் விளையாடுவது போல் ஏகாதசி அங்கு சென்று சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
கைதுஇந்தசமயத்தில் வெளியில் சென்று இருந்த சிறுமியின் தாயார் அங்கு வந்தார். அவர் மகளுக்கு, ஏகாதசி பாலியல் தொல்லை கொடுத்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் பாதிக்கப்பட்ட சிறுமி ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
இதுகுறித்து சிறுமியின் தாயார் தலைவாசல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து காய்கறி வியாபாரி ஏகாதசியை கைது செய்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.