திருடன் என நினைத்து தொழிலாளியை தாக்கிய போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்


திருடன் என நினைத்து தொழிலாளியை தாக்கிய போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்
x
தினத்தந்தி 27 Dec 2016 3:00 AM IST (Updated: 27 Dec 2016 1:01 AM IST)
t-max-icont-min-icon

திருடன் என நினைத்து தொழிலாளியை தாக்கிய போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். கூலித்தொழிலாளி எர்ணாகுளம் மாவட்டம் ஆலங்காடு கருமாலூர் பகுதியை சேர்ந்தவர் ஷிபு (வயது 46). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி ஷிஜி. சம்பவத்தன்று ஷிபுவுக்கு உடல்நலம்

எர்ணாகுளம்,

திருடன் என நினைத்து தொழிலாளியை தாக்கிய போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

கூலித்தொழிலாளி

எர்ணாகுளம் மாவட்டம் ஆலங்காடு கருமாலூர் பகுதியை சேர்ந்தவர் ஷிபு (வயது 46). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி ஷிஜி. சம்பவத்தன்று ஷிபுவுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து களமச்சேரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றார். பின்னர் சிகிச்சை முடிந்து வீட்டிற்கு திரும்புவதற்காக ஆலுவா பஸ் நிலையத்தில் காத்திருந்தார்.

அப்போது அலூவா போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ஹனி கே.தாஸ் அப்பகுதியில் ரோந்து பணிக்காக வந்தார். அவர், பஸ் நிலையத்தில் காத்திருந்த ஷிபுவை திருடன் என நினைத்து விசாரணைக்காக போலீஸ் நிலையம் அழைத்துச்சென்றார். அப்போது தான் கூலித்தொழிலாளி என்றும் சிகிச்சைக்காக களமச்சேரி அரசு மருத்துவமனைக்கு வந்துவிட்டு திரும்ப ஊருக்கு செல்வதற்காக பஸ் நிலையத்தில் காத்திருந்ததாகவும் ஷிபு தெரிவித்தார்.

பணியிடை நீக்கம்

ஆனாலும் அவர் மீது சப்–இன்ஸ்பெக்டருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை சரமாரியாக தாக்கி விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த ஷிபு சிகிச்சைக்காக ஆலுவா அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சம்பவம் குறித்து தகவலறிந்த ஷிஜி, தனது கணவரை தாக்கிய போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் மீது போலீஸ் உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்தார்.

அதன் பேரில் ஆலுவா போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், திருடன் என நினைத்து ஷிபுவை, சப்–இன்ஸ்பெக்டர் தாக்கியது தெரியவந்தது. பின்னர் இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு போலீசார் அறிக்கை சமர்ப்பித்தனர். அதன் அடிப்படையில் ஹனி கே.தாசை பணியிடை நீக்கம் செய்து அதிகாரிகள் உத்தரவிட்டனர்.


Next Story